மோடி ஆட்சி அமைந்த பிறகு 27 லோக்சபா இடைத் தேர்தல்கள்.. பாஜக வென்றது வெறும் 5 தொகுதிகள்
Recommended Video

டெல்லி: மத்தியில் மோடி தலைமையில் பாஜக அரசு பதவிக்கு வந்த பிறகு, 2014ல் இருந்து இதுவரை 27 லோக்சபா தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், அதில், 5ல் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது.
இன்று 4 லோக்சபா இடைத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதில், மகாராஷ்டிராவின் பந்தாராவில் என்சிபி; நாகாலாந்தில் என்டிபிபி, உபி கைரானாவில் ஆர்எல்டி வெற்றி பெற்ற நிலையில், மகாராஷ்டிராவின் பல்காரில் மட்டும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
இதில் பழைய சீட்டுகளை பாஜக இழந்துள்ளதே தவிர புதிதாக எந்த தொகுதியிலும் அக்கட்சியால் வெல்ல முடியவில்லை.

தொடர் பின்னடைவு
2014ல் மோடி அரசு பிரமாண்ட வெற்றி பெற்ற வருடத்தில், நடந்த இடைத் தேர்தல்களில் 2ல் பாஜக வெற்றி பெற்றது. 2016ல் நடந்த தேர்தலில் பாஜக 2 தொகுதிகளை வென்றது. 2015, 2017 மற்றும் 2018ம் ஆண்டு மார்ச்சில் நடைபெற்ற தேர்தல்களில் பாஜக ஒன்றிலும் வெல்ல முடியவில்லை. இன்றைய ரிசல்ட்டில் ஒரு தொகுதியில் மட்டும் வென்றுள்ளது.

லோக்சபா பலம்
இதன் மூலம், 2014ல் 282 எம்.பிக்களுடன் ஆட்சிக்கு வந்த பாஜகவின் பலம் 272 ஆக சரிந்தது. இன்று கிடைத்துள்ள ஒரு எம்.பியின் மூலம் பாஜக பலம் 273 ஆகியுள்ளது.

அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல்
இருப்பினும், பதவிக்கு வந்த பிறகு பாஜகவுக்கு தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருவது அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல்கள் தொடர்பான பீதியை பாஜக தலைமையிடம் ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பான்மை பலம்
லோக்சபா மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 543 ஆகும். அதில் 272 உறுப்பினர்கள் பலம் இருந்தால் தனிப்பெரும்பான்மை பெற முடியும் பாஜகவிற்கு இப்போது கூடுதலாக ஒரு சீட் கிடைத்துள்ளதால் பெரும்பான்மையை தக்க வைத்துள்ளது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications