For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதை பற்றியும் கவலைப்படாமல்.. கொரோனா சிகிச்சை மையத்தில்.. பாத்ரூமை கைகளால் கிளீன் செய்த பாஜக எம்பி..!

பாஜக எம்பி ஜனார்த்தன மிஸ்ரா கழிவறையை சுத்தம் செய்தார்

Google Oneindia Tamil News

போபால்: கொரோனா ஸ்பெஷல் வார்டில் உள்ள பாத்ரூமை, பாஜக எம்பி ஒருவர் சுத்தம் செய்யும் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தற்போது 2வது அலை வேகமாக பரவி வருகிறது.. இதனால் தொற்று பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகமாகி கொண்டே இருக்கின்றன.. ஆஸ்பத்திரிகள் வழிந்து நிறைகின்றன.. எனவே, கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக, ஆங்காங்கே தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தொற்றுக்கு எதிராக பயன்படும்.. 'சானிடைசர்' கொண்டு போலி மதுபானம் தயாரிப்பு.. 9 பேரை தூக்கிய போலீசார் தொற்றுக்கு எதிராக பயன்படும்.. 'சானிடைசர்' கொண்டு போலி மதுபானம் தயாரிப்பு.. 9 பேரை தூக்கிய போலீசார்

ஆனால், மருத்துவமனைகள் போன்று இந்த மையங்களில் சிகிச்சையின் தரமும், அடிப்படை வசதிகளும் இல்லை என்று பரவலான கருத்து உள்ளது.. அதனால், இதுபோன்ற தற்காலிக மையங்களை அமைச்சர்கள், எம்பிக்கள், நேரடியாகவே சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

எம்பி

எம்பி

அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் மவுகஞ்ச் தெஹ்சில் பகுதியில் ஒரு கொரோனா ஸ்பெஷல் சென்ட்டர் அமைக்கப்பட்டுள்ளது.. இதனை ஆய்வு செய்வதற்காக ரேவாவை சேர்ந்த பாஜக எம்.பி ஜனார்த்தனன் மிஸ்ரா நேரில் சென்றார். அப்போது, அந்த மையத்தில் உள்ள பாத்ரூம் அடைத்து கொண்டும், அசுத்தமாகவும் இருந்திருக்கிறது.

 உதவி

உதவி

இதனை பார்த்ததும், எம்பி ஜனார்தனன், டக்கென இறங்கி சுத்தம் செய்ய ஆரம்பித்துவிட்டார்.. உதவிக்கு யாரையும் எதிர்பார்க்கவே இல்லை.. கைகளில் கிளவுஸ் மாட்டிக் கொண்டு, அடைப்புக்குள் இருந்தவைகளை எல்லாம் இழுத்து வெளியே போட்டார்.. பிறகு அந்த கழிவறையை தேய்த்து சுத்தம் செய்தார்.. அதன்பிறகு, அங்கிருந்த அதிகாரிகளிடம் இனிமேலாவது பாத்ரூம்களை சுத்தமாக வைத்திருங்கள், இல்லாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

 சுகாதாரம்

சுகாதாரம்

இதைபற்றி எம்பி சொல்லும்போது, இந்த தொற்று காலத்தில் ஒவ்வொரு சுகாதார பணியும் அவசியம்.. பாத்ரூம் அசுத்தமாக இருந்தது.. மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவே, நான் அதை சுத்தம் செய்தேன் என்றார்.. கழிவறையை சுத்தம் செய்யும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..

 வீடியோ

வீடியோ

பாஜக எம்பி ஜனார்த்தனன் மிஸ்ரா, மத்திய அரசின் தூய்மை இந்தியா இயக்கத்தை சார்ந்தவர் ஆவார்.. சுற்றுப்புறத்தூய்மைக்கும், சுகாதாரத்துக்கும் முக்கியத்துவம் தருபவர்.. சாலைகள், வீதிகளை தானாகவே, யார் உதவியுமின்றி சுத்தம் செய்பவர்.. கடந்த 2018ம் ஆண்டு, ஒரு பள்ளிக்குள் ஆய்வு செய்ய சென்றபோது, அங்கும் கழிவறை சுத்தமில்லாமல் இருந்ததால் அவரே, சுத்தப்படுத்தி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
BJP MP cleans toilet at Madhya pradesh covid centre
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X