மே.வங்கம்: திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவும் 3 பாஜக எம்பிக்கள்? மத்திய குழுவை அவசரமாக அனுப்பிய டெல்லி!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில பாஜகவில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் அக்கட்சியின் ராஜ்யசபா எம்பி அனந்த் மகாராஜா, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மாநில முதல்வருமான மமதா பானர்ஜியை திடீரென சந்தித்துப் பேசினார். லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்பிக்கள் 3 பேர் திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. இதனையடுத்து டெல்லி பாஜக மேலிடம் மேற்கு வங்க மாநிலத்துக்கு அவசரமாக மத்திய குழு ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அத்தியாயத்தையே பாஜக முடித்துவிடப் போகிறது என பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவித்திருந்தன. ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மொத்தம் 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 29 இடங்களைக் கைப்பற்றியது. பாஜகவால் 12 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. இதனால் கருத்து கணிப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகிப் போகின.

பாஜக எம்பிக்கள் நிலை என்ன?: இதனிடையே லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே பாஜகவின் 3 புதிய எம்பிக்கள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவப் போகிறார்கள்; பாஜக எம்பிக்கள் எண்ணிக்கை மேலும் குறையும் என அக்கட்சி மூத்த தலைவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
திரிணாமுல் பக்கம் தாவும் பாஜக எம்பிக்கள்?: இந்த நிலையில் பாஜகவின் சவுமித்ரா கான் என்ற எம்பி, உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் காலில் விழுந்து வாழ்த்துப் பெற்றார். தற்போதைய லோக்சபா தேர்தலில் வெறும் 5,567 வாக்குகளில் வென்றவர் சவுமித்ரா கான். அத்துடன் நிற்காமல் திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியை புகழ்ந்தும் பேசி வருகிறார் சவுமித்ரா கான். இவரைப் போலவே வேறு சில பாஜக எம்பிக்களும் திரிணாமுல் காங்கிரஸை புகழ்ந்தும் பேசி வருகின்றனர்.
மமதாவை சந்தித்த பாஜக எம்பி: இதன் அடுத்த கட்டமாகவே பாஜகவின் ராஜ்யசபா எம்பி அனந்த் மகாராஜா, முதல்வர் மமதா பானர்ஜியை சந்தித்து பேசியிருக்கிறார். கூச்பிகார் பகுதியை தனிமாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துபவர் அனந்த் மகாராஜா. பாஜகதான் முதலில் அனந்த் மகாராஜாவை பயன்படுத்திக் கொண்டது. ஆனால் தற்போதைய தேர்தலில் கூச்பிகார் பகுதியில் பாஜக பெரும் பின்னடவை எதிர்கொண்டது. அனந்த் மகாராஜா இம்முறை மமதாவின் திரிணாமுல் கை கோர்த்ததுதான் காரணம் எனவும் கூறப்படுகிறது.
டெல்லி மத்திய குழு: அத்துடன் உள்ளூர் பாஜக நிர்வாகிகளுக்கு எதிராக பல இடங்களில் பாஜக தொண்டர்கள் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இதனால் மேற்கு வங்கத்தில் பாஜகவின் இருப்பு ஆட்டம் காணும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரையில் பாஜகவுக்கு கணிசமான செல்வாக்கு இருந்தாலும் பெரும்பாலான இடதுசாரிகள், பாஜகவில் இணைந்ததால் விஸ்வரூபம் பெற்றது. தற்போது திடீரென பாஜகவுக்குள் கலகக் குரல்கள் வெடிப்பதால் உடனடியாக மத்திய குழு ஒன்றை டெல்லி மேலிடம் அனுப்பி வைத்திருக்கிறது. மேற்கு வங்க பாஜக எம்பிக்களைத் தக்க வைக்கவும் உள்ளூர் பாஜக மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரவும் இந்த டெல்லி மத்திய குழு உரிய ஆலோசனைகளை மேற்கொள்ளும் என்கின்றன தகவல்கள்.
-
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications