கடவுள் ராமனாலும்கூட பலாத்காரங்களைத் தடுக்க முடியாது- பாஜக எம்எல்ஏ சர்ச்சை கருத்து!
கடவுள் ராமனாலும்கூட பலாத்காரங்களைத் தடுக்க முடியாது பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ: கடவுள் ராமனால் கூட பாலியல் பலாத்கார சம்பவங்களைத் தடுக்க முடியாது என்று உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உன்னவ் பாலியல் பலாத்காரம் சம்பவம் குறித்து, உத்தரப் பிரதேச மாநில பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் நேற்று சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாநிலத்தில் உன்னவ் போன்ற பலாத்கார சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியாது. கடவுள் ராமன் மீண்டும் பூமிக்கு அவதரித்து வந்தால் அவரால்கூட பலாத்கார சம்பவங்களைத் தடுத்து நிறுத்த முடியாது. பாலியல் பலாத்காரங்களை அரசியலமைப்புச் சட்டத்தால்கூட அதிக அளவில் கட்டுப்படுத்த முடியாது. பாலியல் பலாத்காரங்களை கடுப்படுத்த வேண்டுமானால், சமுதாயத்தில் நல்ல மதிப்பீடுகளை ஊக்குவிப்பதன் மூலமே கட்டுப்படுத்த முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

சுரேந்திர சிங்கின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சை கருத்துகளுக்குப் பேர்போன சுரேந்திர சிங், இதற்கு முன்பு, தாஜ்மஹாலை ராம் மஹால் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை ராவணனின் தங்கை சூர்ப்பணகையுடன் ஒப்பிட்டு பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்!












Click it and Unblock the Notifications