மொத்தம் 59 எம்எல்ஏ பதவிகள்.. களமிறங்கிய 624 வேட்பாளர்கள்.. உ.பி-யில் இன்று 4ம் கட்ட வாக்குப்பதிவு
இன்று நடக்கிறது உபியில் 4ம் கட்ட சட்டசபை தேர்தல்
கான்பூர்: ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வரும் உத்தரபிரதேசத்தின் சட்டமன்ற தேர்தலின் 4ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது.
அதில் 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது... ஏற்கனவே 3 கட்ட தேர்தல் இங்கு நிறைவடைந்துள்ளது.

பிரச்சாரம் ஓய்ந்தது
முதல் கட்டமாக 58 தொகுதிகளில் கடந்த 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2-ம் கட்டமாக, 55 தொகுதிகளில் 14-ம் தேதியும் தேர்தல் நடந்தது.. இதில், 586 வேட்பாளர்கள் உள்ளனர்.. முதல் மற்றும் 2 கட்டத்திலும் சேர்த்து 61.20 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. அதேபோல, 59 தொகுதிகளில், 3-ம் கட்டமாக நேற்று முன்தினமும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 627 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்நிலையில், 4-ம் கட்டமாக, 59 தொகுதிகளில், இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம், நேற்றுமுன்தினம் மாலையுடன் நிறைவு பெற்றது.

வாக்குப்பதிவு
லக்னோ, பிலிப்பிட், கெரி, சிதாபூர், ஹர்டோய், உன்னாவ், ரேபரேலி, பதேபூர், பாண்டா ஆகிய 9 மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது... உத்தர பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்று வரும் தேர்தலில் பா.ஜ.க, சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது.. இதில், ஆரம்பத்தில் இருந்தே, பாஜக-வுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 624 வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள்.

பாஜக கூட்டணி
நான்காவதாக நடைபெறும் இன்றைய வாக்குப்பதிவிற்கு 2.12 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். கடந்த தேர்தலில் 59 தொகுதிகளில், பாஜக 51 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 4 தொகுதிகளிலும், 3 இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சியும், பாஜக கூட்டணி கட்சியான அப்னா தல் (சோனாலால்) கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்தது.. இந்த முறை இந்த தொகுதியின் எதிர்பார்ப்பு பன்மடங்காக கூடியுள்ளது.

யோகி ஆதித்யநாத்
எனினும், உபியை பொறுத்தவரை, தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளின்படி, உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.. ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களை தனித்தே பெரும் அதாவது, பாஜக 230 - 235 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி 160 - 165 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முடிவுகள்
தேர்தல் அமைதியான முறையில் நடைபெற உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.. இன்றுடன் 4 கட்ட வாக்குபதிவு முடிவுறும் நிலையில் இன்னும் 3 கட்ட வாக்குப்பதிவு நடைபெற வேண்டியுள்ளது. வரும் மார்ச் 3ம் தேதியுடன் 7ம் கட்ட மற்றும் கடைசி கட்ட தேர்தல் முடிவுற்று மார்ச் 10ம் தேதி உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications