ஜே.என்.யூவில் ஆணுறை... வில்லங்கமாக பேசிய பாஜக எம்.எல்.ஏ விடம் விளக்கம் கேட்கும் அமித் ஷா
டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவ, மாணவியர் பற்றி தரக்குறைவாக கருத்து தெரிவித்த பாஜக எம்.எல்.ஏ. கியான்தேவ் அஹுஜாவின் பேச்சு பாஜக தலைவர் அமித் ஷாவை கோபம் அடைய வைத்துள்ளது. அவரை டெல்லிக்கு வருமாறு அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ. கியான்தேவ் அஹுஜா டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவ, மாணவியர் பற்றி கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அவர் மாணவர்கள் பற்றி கூறுகையில்,
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் தினமும் 3 ஆயிரம் பீர் கேன்கள், பாட்டில்கள் கிடக்கும். யார் பீர் குடிக்கிறார்கள் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். பல்கலைக்கழக வளாகத்தில் தினமும் 10 ஆயிரம் சிகரெட் துண்டுகள், 4 ஆயிரம் பீடித் துண்டுகள் கிடக்கின்றன. இது தவிர 50 ஆயிரம் எலும்புகள் வேறு கிடக்கின்றன. அந்த தேச துரோகிகள் இறைச்சி சாப்பிடுகிறார்கள்.
மாணவ, மாணவியர் இரவு 8 மணிக்கு மேல் கலாச்சார நிகழ்ச்சி என்ற பெயரில் நிர்வாணமாக நடனம் ஆடுகிறார்கள். பல்கலைக்கழக வளாகத்தில் பயன்படுத்தப்பட்ட 3 ஆயிரம் ஆணுறைகளை தினமும் பார்க்க முடிகிறது என்றார்.
இதையடுத்து மக்கள் கியான்தேவை கடுமையாக விமர்சித்தும், கிண்டல் செய்தும் ட்வீட் செய்ததால் #BJPCountsCondoms(ஆணுறைகளை எண்ணும் பாஜக) என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது.
கியான்தேவின் கருத்தால் பாஜக தலைவர் அமித் ஷா கோபம் அடைந்துள்ளார். உடனே டெல்லிக்கு கிளம்பி வந்து விளக்கம் அளிக்குமாறு அவர் கியான்தேவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications