உறைந்து போன நெட்டிசன்கள்.. இதென்ன கருப்பா? பார்க்கவே பயங்கரமா இருக்கே.. இணையத்தில் பரவும் வீடியோ
புவனேஷ்வர்: ஒடிசா காட்டுப்பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையம் முழுக்க தீயாக பரவி வருகிறது.
Recommended Video
புலிகள் எண்ணிக்கை இந்தியாவில் வேகமாக குறைந்து வந்த நிலையில் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக தற்போது புலிகள் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக உயரத்தொடங்கி உள்ளது. 2018ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 2967 புலிகள் உள்ளன.
இந்தியாவில் பல்வேறு வகையான புலி இனங்கள் இருக்கின்றன. இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, ஒடிசா, மேற்கு வங்கம், தமிழ்நாடு என்று பல மாநிலங்களில் வனப்பகுதிகளில் புலிகள் உள்ளன.
இந்திய புலி வகைகளில் ஒன்றான ஒடிசாவில் இருக்கும் சிமிலிபால் புலி வகைகள் முக்கியமானது ஆகும். இந்த புலிகள் சாதராண இளம் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருந்து கருப்பு நிறமாக சமீப நாட்களாக மாறி வருகிறது.

ஒடிசா
இந்த நிலையில்தான் ஒடிசா காட்டு பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இந்த 15 நொடி வீடியோவில் கருப்பு நிறத்தில் வினோதமான விலங்கு ஒன்று மரத்தின் மீது சாய்ந்து இருப்பது போன்ற காட்சிகள் உள்ளன. பார்த்ததும் முதலில் கரடி போல இருக்கும் இந்த விலங்கை பார்த்து பலர் குழம்பும் அளவிற்கு வித்தியாசமாக உள்ளது. பார்க்கவே பயங்கரமாக, உறைய வைக்கும் அளவிற்கு இந்த விலங்கு காட்சி அளிக்கிறது. இதன் உடல் முழுக்க கோடுகளும் உள்ளன.

புலி
உண்மையில் இது ஒரு புலி ஆகும். வனத்துறை அதிகாரி சுஷாந்த நந்தா இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். இது சிமிலிபால் காட்டுப்பகுதியில் ஒடிசாவில் காணப்படும் கருப்பு நிற புலி ஆகும். இதன் உடல் முழுக்க கருப்பு நிறத்தில் இருக்கும். கோடுகள் மட்டும் அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும். சில கோடுகள் தங்க நிறத்திலும் காணப்படும். இது மிக மிக அரிதான வகையை சேர்ந்த புலிகள் ஆகும். இதன் செல்களில் ஏற்படும் மாற்றம்தான் இந்த நிற மாற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

புலிகள் எண்ணிக்கை
ஆம்.. 2017, 2018 மற்றும் 2019ல் இருந்து ஒடிசாவில் பல புலிகளின் உடல்களில் இந்த நிற மாற்றம் ஏற்பட தொடங்கி உள்ளது. கடந்த 50 முதல் 60 வருடங்களுக்கு முன்பே ஒடிசாவில் சிமிலிபால் பகுதியை சேந்த பழங்குடி மக்கள் புலிகள் நிறம் மாறுவதாக குறிப்பிட்டு வந்துள்ளனர். ஆனால் அதை முதலில் புலிகளை ஆராய்ச்சி செய்யும் வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் நம்பவில்லை. ஆனால் இப்போது அவர்களின் கண்காணிப்பில் இருக்கும் புலிகளே நிறம் மாற தொடங்கி உள்ளன.

ஏன் இப்படி?
இதனால் அந்த புலிகள் மிகவும் வினோதமாக காட்சி அளிக்கின்றன. புலிகளின் உடலில் ஏற்பட்ட ஜீன் மாற்றம்தான் இதற்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புலிகளின் உடலில் டிரான்ஸ்மெம்பரீன் அமினோபெப்டிடாஸ் க்யூ அல்லது டாக்பெப் ஆகியவற்றில் ஏற்பட்ட ஜீன் உருமாற்றம் காரணமாக இந்த வரிகள் மாற்றம் ஏற்பட்டு, அது புலிகளுக்கு புதிய நிறத்தை கொடுத்து இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புலிகளின் வீடியோ தற்போது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications