காஷ்மீர் தால் ஏரியில் திடீரென கவிழ்ந்த படகு.. மீன்பிடிக்க போன தந்தை - மகனுக்கு தத்தளிப்பு- வீடியோ
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற தால் ஏரியில் மீன்பிடிக்க சென்ற தந்தை - மகன் படகில் சென்றனர். அப்போது சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால் படகு திடீரென்று கவிழ்ந்த நிலையில் இருவரும் ஏரிக்குள் விழுந்து உயிருக்கு தத்தளித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் புகழ்பெற்ற தால் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி சுற்றுலா தலமாக உள்ளது. பொதுமக்கள் இந்த ஏரியில் சுற்றுலா படகில் பயணிப்பது வழக்கமான ஒன்றாகும். அதேபோல் உள்ளூர் மக்களும் இந்த ஏரியில் மீன்பிடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் இன்று மதியம் ஸ்ரீநகரில் உள்ள ரெய்னாவாரி பகுதியை சேர்ந்த முகமது சுல்தான் கோஷா மற்றும் அவரது மகன் அப்துல் மஜீத் கோஷா ஆகியோர் படகில் மீன்பிடிக்க சென்றனர்.
இந்த சமயத்தில் பயங்கர சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அவர்களின் படகு நிலைத்தடுமாறி கவிழ்ந்தது. படகில் இருந்த அப்துல் மஜீத் கோஷா மற்றும் முகமது சுல்தான் கோஷா ஆகியோர் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். ஏரியாக இருந்தாலும் கூட சூறைக்காற்று மற்றும் மழை காரணமாக ஏரி கொந்தளிப்புடன் காணப்பட்டது.
இதனால் அவர்களால் நீந்தி வெளியே வர முடியவில்லை. இதையடுத்து உடனடியாக அங்கிருந்தவர்கள் மாநில பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் படகில் சென்று ஏரியில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் அப்துல் மஜித் கோஷாவை மீட்பு படையினர் மீட்டனர். மாறாக முகமது சுல்தான் கோஷாவை அவர்களால் மீட்க முடியவில்லை. அவர் தண்ணீரில் மூழ்கினார். அவரை தேடும் பணியில் மீட்பு பணியினர் ஈடுபட்டனர். இருப்பினும் அவரை கண்டுப்பிடிக்க முடியவில்லை.
இதற்கிடையே தான் தால் ஏரியில் அப்துல் மஜித் கோஷா தத்தளிப்பதும், அவரை மீட்பு படையினர் சிரமப்பட்டு மீட்பதையும் கரையில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
Boat capsized in Srinagar's Dal Lake due to strong gusty winds. #dallake pic.twitter.com/miXvGGv4OU
— Nantha Kumar (@Nanthakumarrnk) May 2, 2025
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications