3,000 கன அடிநீர் திறப்பு உத்தரவை கர்நாடகா, தமிழகம் ஏற்கவில்லை- மேற்பார்வை குழு தலைவர் சசிசேகர்
டெல்லி: 10 நாட்களுக்கு 3,000 கன அடிநீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவை கர்நாடகா, தமிழகம் ஏற்கவில்லை; தேவையானால் 2 மாநில அரசுகளும் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்று மேற்பார்வைக் குழுவின் தலைவர் சசிசேகர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய நீர்வளத்துறை செயலர் சசிசேகர் தலைமையில் இன்று காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட முடியாது என்று கர்நாடகா அரசு தரப்பு வாதிட்டது.

ஆனால் சம்பா சாகுபடிக்கு 64 டிஎம்சி நீரை திறக்க வேண்டும் என்று தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. பின்னர், வரும் 21-ந் தேதி முதல் 3,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட மேற்பார்வைக் குழு உத்தரவிட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மேற்பார்வை குழு தலைவர் சசிசேகர், 3,000 கன அடி நீரை திறக்க உத்தரவிட்டதை கர்நாடகாவும் தமிழக அரசும் ஒப்புக் கொள்ளவில்லை. ஆகையால் தேவைப்பட்டால் 2 மாநில அரசுகளும் உச்சநீதிமன்றத்தை அணுகலாம்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பாசன தேவை, கர்நாடகா நீர் இருப்பு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 30-ந் தேதிக்கு பின்னர் நிலைமைகளை ஆராய்ந்து மற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications