போட்டோக்கு போஸ்... ரயிலின் மின்சாரக் கம்பியைப் பிடித்த 10ம் வகுப்பு மாணவன் பலி
டெல்லி: டெல்லியில், செல்போனில் போட்டோ எடுப்பதற்காக விளையாட்டுத் தனமாக சரக்கு ரயிலின் மீதேறி மின்சாரக் கம்பியைப் பிடித்த பத்தாம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாகப் பலியானான்.
நேற்று மாலை 4 மணியளவில், தென்மேற்கு டெல்லியின், நாரைய்னா ரயில் நிலையத்திற்கு தன் நண்பர்களுடன் வந்துள்ளான் ஹிமான்ஷூ என்ற பத்தாம் வகுப்பு மாணவன். விளையாட்டுத் தனமாக அங்கிருந்த சரக்கு ரயிலின் மீதேறி,மின்சாரக் கம்பியை பிடிக்க முயற்சி செய்துள்ளான் ஹிமான்ஷூ. அதனை தனது நண்பனிடம் செல்போனில் போட்டோ எடுக்கச் சொல்லியுள்ளான்.
மின்சாரக் கம்பியைத் தொட்ட ஹிமான்ஷூ, மின்சாரத்தால் தாக்கப் பட்டு தூக்கி வீசப்பட்டுள்ளான். மாணவரொருவன் அடிபட்டுக் கீழெ கிடக்கும் தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் உடனடியாக அச்சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி ஹிமான்ஷூ பரிதாபமாக உயிரிழந்தான். அதனைத் தொடர்ந்து அவனது நண்பர்களிடம் நடத்தப் பட்ட விசாரணையில், அவர்கள் அனைவரும் அன்றைய தினம் பள்ளிக்கு செல்லாததும், ஏணியின் உதவி கொண்டு ரயிலின் மீதேறி மின்சார கம்பியைத் தொட ஹிமான்ஷூ முயற்சி செய்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும், தான் மின்சாரக் கம்பியைத் தொட்டவாறு கம்பீரமாக போஸ் தருவதை செல்போனில் போட்டோ எடுக்க ஹிமான்ஷூ சொன்னதாகவும், ஆனால், கம்பியைத் தொட்ட ஹிமான்ஷூ கீழே விழுந்ததாகவும் அவனது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளை ஹிமான்ஷூவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப் பட உள்ளது. சிறுவன் ஒருவன் ரயிலின் மீதேறுவதைக் கூட கவனிக்காமல் அங்கிருந்த ரயில்வே ஊழியர்கள் எவ்வாறு அஜாக்கிரதையாக இருந்தனர் என போலீசார் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
திருவள்ளூர் மக்களுக்கு தெற்கு ரயில்வே குட்நியூஸ்.. புதிதாக 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications