பாகிஸ்தான் பிடித்து வைத்திருந்த இந்திய வீரர் விடுவிப்பு.. 20 நாட்களுக்கு பிறகு இந்தியா திரும்பினார்
டெல்லி: எல்லை தாண்டி பாகிஸ்தானில் தவறுதலாக நுழைந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பூர்ணம் குமார் ஷா சுமார் 20 நாட்களுக்குப் பிறகு இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். அட்டாரி வழியாகப் பூர்ணம் குமார் ஷாவை பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் ஒப்படைத்தது.
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வந்தது. குறிப்பாகக் கடந்த ஏப்ரல் 21ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள அப்பாவி மக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் அப்போது முதலே இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்தது. பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்தது.

தவறுதலாகச் சென்றார்
அப்போது தான் கடந்த ஏப்ரல் 23ம் தேதி எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பூர்ணம் குமார் ஷா என்பவர் தவறுதலாக எல்லையைக் கடந்து பாகிஸ்தானுக்குள் சென்றுவிட்டார். இதையடுத்து அவரை பாகிஸ்தான் ராணுவம் சிறை பிடித்தது. அப்போதே அவரை அழைத்து வர இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இருப்பினும், அப்போது இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் இருந்ததால் அவரை விடுவிக்கப் பாகிஸ்தான் மறுத்துவிட்டது.
விடுவிப்பு
இதனால் சுமார் 20 நாட்களுக்கு மேலாக அவர் பாகிஸ்தானிலேயே இருந்தார். இதற்கிடையே இப்போது இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதல் முழுமையாக முடிவுக்கு வந்துள்ளது. இதனால் இந்திய ராணுவ வீரரைப் பாகிஸ்தான் ஒப்படைத்ததுள்ளது. தவறுதலாக எல்லை தாண்டிச் சென்றதாகப் பிடிக்கப்பட்ட வீரரைப் பாகிஸ்தான் ராணுவம் ஒப்படைத்துள்ளது. பூர்ணம் குமார் ஷா சுமார் 20 நாட்களுக்குப் பிறகு இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். இந்தியா பாகிஸ்தான் எல்லையில் உள்ள அட்டாரி வழியாகப் பூர்ணம் குமார் ஷா ஒப்படைக்கப்பட்டார்.
இது தொடர்பான வீடியோவும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட வீரர் காரில் அழைத்து வரப்படுவது போல அந்த வீடியோ அமைந்துள்ளது.
எல்லை பாதுகாப்புப் படை
இது தொடர்பாக எல்லை பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இன்று காலை 10.30 மணிக்கு அட்டாரி வாகா எல்லையில் பாகிஸ்தானில் இருந்து பூர்ணம் குமார் ஷா திருப்பி அனுப்பப்பட்டார். ஏப்ரல் 23ம் தேதி பிரோஸ்பூர் செக்டார் பகுதியில் சுமார் 1150 மணி அளவில் பணியில் இருந்தபோது, பூர்ணம் குமார் ஷா தவறுதலாகப் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தார். இதனால் பாகிஸ்தான் ரேஞ்சர்கள் அவரை தடுத்து வைத்தனர். பாகிஸ்தான் ரேஞ்சர்களுடனான தொடர் மீட்டிங் பிறகு இப்போது அவர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் எல்லை
பொதுவாக எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் வீரர்கள் தவறுதலாக எல்லை தாண்டி நுழைந்துவிடுவது அவ்வப்போது நடக்கும். சுமுகமான பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். ஆனால், இந்த முறை மோதல் இருந்ததால் அவரை அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தச் சூழலில் தான் தான் இப்போது வீரர் பூர்ணம் குமார் ஷா பத்திரமாக இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளார். இது இந்தியாவுக்குக் கிடைத்த முக்கியமான வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
முன்னதாக தனது கணவர் பாதுகாப்பாகத் தாயகம் திரும்பத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனப் பூர்ணம் குமார் ஷாவின் மனைவியும் மனைவியும் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications