மத்திய அமைச்சரவை மாற்றத்தில் அதிமுகவுக்கு இடம் இல்லை
மத்திய அமைச்சரவை ஞாயிறன்று மாற்றி அமைக்கப்பட உள்ள நிலையில் இந்த அமைச்சரவையில் அதிமுக இடம்பெறவில்லை.
டெல்லி: மத்திய அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் ஞாயிறன்று நடைபெற உள்ளது. 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ள நிலையில் இந்த அமைச்சரவையில் அதிமுகவிற்கு இடமில்லை என்பது உறுதியாகியுள்ளது.
மோடி அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த தகவலை குடியரசுத்தலைவர் மாளிகை வட்டாரங்கள் உறுதிபடுத்தப்பட்டுள்ளன.
2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக இந்த அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ளது. அமைச்சர்களின் செயல்பாடு, வர இருக்கும் சட்டசபை தேர்தல் ஆகிய மூன்று அம்சங்களைக் கணக்கில் கொண்டுதான் அமைச்சரவை மாற்றம் நடைபெறுகிறது.
இப்போது வரை மோடியின் அமைச்சரவையில் கேபினெட் அந்தஸ்து உள்ள அமைச்சர்கள் 24 பேர், தனிப்பொறுப்புடன் கூடிய மத்திய இணை அமைச்சர்களாக 12 பேரும், இணை அமைச்சர்களாக 36 பேரும் என 72 அமைச்சர்கள் உள்ளனர். இப்போது 9 பேரை அமைச்சர்களாக மோடி நியமிக்க முடியும். மத்திய அமைச்சரவை என்பது 81 பேருக்கு அதிகமாக நியமிக்கப்படக் கூடாது என்பது மரபாகும். அதன்படி தற்போது 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.

அமைச்சரவை மாற்றத்திற்கு காரணம்
2018ஆம் ஆண்டு சில மாநிலங்களுக்குச் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் ஜே.பி நட்டா, இமாசலபிரதேசத்தின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார். அவருக்குப் பதில் முன்னாள் முதல்வர் பிரேம் குமார் தோமல் சுதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிதின் கட்கரி
ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள நிலையில், தரைவழிப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் வசம் ரயில்வே துறை ஒப்படைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அமைச்சரவையில் அதிமுக
மத்திய பாஜக அமைச்சரவையில் அதிமுக இணையக்கூடும் என்று தகவல்கள் வெளியானது. தற்போது துணை சபாநாயகராக இருக்கும் தம்பிதுரை, ஓ.பி.எஸ் தனி அணியாக செயல்பட்டபோது அவருக்கு டெல்லியில் வலதுகரமாக செயல்பட்ட மைத்ரேயன் ஆகியோருக்கு மத்திய அமைச்சரவை பதவி வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியானது.

அமைச்சர்களுடன் சந்திப்பு
அதேபோல், அதிமுக எம்.பி. வேணுகோபாலுக்கும் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டன. தம்பிதுரை அமித் ஷாவைச் இடையேயான சந்திப்பு, அமைச்சர் அருண் ஜெட்லி உடனான சந்திப்பே இத்தகைய தகவல்கள் கசிய காரணமாக அமைந்தன.

அருண் ஜெட்லி
திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்ற அமைச்சர் செங்கோட்டையனிடமும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் அமைச்சரவையில் அதிமுகவிற்கு இடம் அளிப்பது மோடியின் இறுதி முடிவு என்றே நிதியமைச்சர் அமைச்சர் அருண் ஜெட்லி கூறிவிட்டாராம்.

இருண்ட முகங்கள்
ஜெயலலிதா உயிரோடு இருந்த போது அதிமுக உடன் எதுமாதிரியான நட்பு கடைபிடிக்கப்பட்டதோ அதே நட்பு அதிமுக உடன் தொடரும் என்று மத்திய அமைச்சர்கள் கூறியதால் அமைச்சரவையில் இடம் பெறலாம் என்று ஆசையோடு இருந்தவர்களின் முகங்கள் இருண்டு போனதாம்.

இறுதி செய்த மோடி
அமைச்சரவையில் இடம் பெறப்போகிறவர்கள் யார் யார் என்ற இறுதி கட்ட ஆலோசனையில் பிரதமர் மோடியும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் ஈடுபட்டனர். அதன்படி 9 புதிய அமைச்சர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன.
இந்த பட்டியலில் அதிமுகவினர் பெயர் இடம்பெறவில்லை.
-
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
ஒவ்வொரு அமைச்சருக்கும் டார்கெட் நிர்ணயித்த முதல்வர் விஜய்.. கேபினட் மீட்டிங் பற்றி நிர்மல் விளக்கம்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications