மத்திய அமைச்சராகிறார் மெகபூபா முப்தி... நஜ்மா ஹெப்துல்லா டிஸ்மிஸ்?
டெல்லி: காஷ்மீரின் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி உள்ளிட்டோரை சேர்த்து மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய அமைச்சரவையில் இருந்து நஜ்மா ஹெப்துல்லா நீக்கப்படலாம் எனத் தெரிகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணி அரசு கடந்த ஆண்டு மே மாதம் பதவியேற்றது. அப்போது பிரதமருடன் 45 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

முதல் அமைச்சரவை மாற்றம்
கடந்த நவம்பரில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் கோவா மாநில முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் சுரேஷ் பிரபு ரயில்வே அமைச்சராகவும் பொறுப்பேற்றனர். அவர்களோடு சேர்த்து 20 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்.

அமைச்சரவை விரிவாக்கம்
இப்போது மத்திய அமைச் சரவையில் 65 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ள நிலையில் அமைச் சரவையை மேலும் விரிவாக்கம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார்.

ஏப்.8க்கு முன்பு?
வரும் 8-ம் தேதி பிரதமர் வெளிநாட்டுப் பயணத்தை தொடங்குகிறார். அதற்கு முன்பாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிகிறது.

மெகபூபாவுக்கு மத்திய அமைச்சர்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சி(பிடிபி) - பாரதிய ஜனதா கூட்டணி அரசு அண்மையில் பதவியேற்றது. கூட்டணி பேச்சு வார்த்தையின்போது பிடிபி தலைவர் மெகபூபா முப்திக்கு அமைச்சர் பதவி வழங்க உறுதி யளிக்கப்பட்டதாகக் கூறப்படு கிறது. இதனால் அமைச்சரவை விரிவாக்கத்தில் மெகபூபாவுக்கு இடம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

கேபினட் அந்தஸ்துக்கு..
தற்போதைய இணை அமைச்சர்கள் ராஜீவ் பிரதாப் ரூடி, முக்தர் அப்பாஸ் நக்வி, மனோஜ் சின்ஹா ஆகியோர் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்படலாமாம்.

நஜ்மா டிஸ்மிஸ்?
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு ஆளுநராக நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications