வெயிலில் கட்டி வைத்ததால் ஆத்திரம்... எஜமானை கடித்துக் கொன்ற ராஜஸ்தான் ஒட்டகம்!

Subscribe to Oneindia Tamil

ஜெய்பூர்: வெயிலில் கட்டிவைக்கப்பட்டிருந்த ஒட்டகம் ஒன்று ஆத்திரமடைந்து அதன் எஜமானையே கடித்துக் கொன்ற சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நிகந்துள்ளது.

ராஜஸ்தான் பாலைவனம் நிறைந்த மாநிலம். அங்கு தற்போது கோடை வெயில் வெளுத்து வாங்குகிறது. இதனால் அங்கு வசித்துவரும் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகிவருதின்றனர்.

Camel kills owner

இந்நிலையில், ராஜஸ்தான் மங்தா கிராமத்தில் வசித்துவரும் உர்ஜாராம் தனது வீட்டில் செல்லப் பிராணியாக ஒட்டகத்தை வளர்த்து வந்தார். கடந்த சனிக்கிழமை அவரது வீட்டிற்கு விருந்தினர்கள் ஏராளமானோர் வந்ததுள்ளனர். இதனால், உர்ஜாராம் தனது ஒட்டகத்தை வீட்டுக்கு வெளியே கட்டிவைத்துவிட்டு, வீட்டினுள் இருந்த தனது விருந்தினர்களை உபசரிப்பதில் கவனம் செலுத்திவிட்டார்.

இதனிடையே, அன்று இரவு தான் அவருக்கு ஒட்டகத்தின் நினைவே வந்தது போலும். இதையடுத்து அவசரமாக வெளியே வந்து ஒட்டகம் கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்க்க முயற்சி செய்துள்ளார் உர்ஜாராம்,

ஆனால், ஓட்டகமோ நாள் முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலில் நின்று கொண்டிருந்ததால், கடுமையாக கோபத்தில் இருந்துள்ளது. அப்போது, ஒட்டகமானது உர்ஜாராமை எட்டி உதைத்ததுடன், அவரது தலையையும் பற்களால் கடித்து கொன்றுவிட்டதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+