Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக வைத்த டார்கெட்..ஜஸ்ட் 2 மாதம் தான்..மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவி காலியானது எப்படி? ‛டைம்லைன்’

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவி இன்று அதிரடியாக பறிக்கப்பட்டது. இந்நிலையில் தான் அவரை பாஜக கட்டம் கட்டி 2 மாதத்துக்குள் எம்பி பதவியில் இருந்து தூக்கி உள்ளது. இதன் பின்னணி குறித்த விபரம் வருமாறு:

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியாக இருந்தவர் மஹுவா மொய்த்ரா எம்பி. 49 வயது நிரம்பிய இவர் மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.

Cash For Query: How Mahua Moitra Expelled From Parliament Timeline from october 12 to December 8? details here

இந்நிலையில் தான் அதானி விவகாரம் குறித்த நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப மஹுவா மொய்த்ரா தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் பணம், பல்வேறு பரிசுப் பொருட்களை லஞ்சமாக பெற்றதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்ற லோக்சபா நெறிமுறைக்குழு விசாரணையை தொடங்கியது. அதன்பிறகு 479 பக்க அறிக்கையை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் சமர்பித்தது. அதில் மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளது. இதனால் அவரது பதவியை பறிக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில் தான் இன்று நாடாளுமன்ற லோக்சபாவில் கடும் அமளிக்கு இடையே லோக்சபா நன்னடத்தை குழு தலைவரான பாஜகவின் வினோத் குமார் சோன்கர் தாக்கல் செய்தார். இதையடுத்து மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் தான் மஹுவா மொய்த்ராவின் எம்பியின் பதவி பறிப்புக்கு முக்கிய காரணம் என்பது பாஜக எம்பியான நிஷிகாந்த துபே தான். அவர் எப்படி காரணமாக இருந்தார் என்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.

அக்டோபர் 14: நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் அதானி விவகாரம் குறித்து கேள்வியெழுப்ப திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா தொழிலதிபர் தர்ன் ஹிராநந்தனியிடம் லஞ்சம் பெற்றதாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹாத்ராய் சிபிஐயில் புகாரளித்தார். இதனை மஹுவா மொய்த்ரா மறுத்ததோடு அவரை விமர்சித்தார். இதையடுத்து வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹாத்ராய் பாதுாப்பு கோரி டெல்லி காவல்துறைக்கு கடிதம் எழுதினார்.

அக்டோபர் 15: பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, மஹுவா மொய்த்ரா எம்பி மீதான குற்றச்சாட்டு தொடர்பாக லோக்சபா சபாநாயகரிடம் புகாரளித்தார். இந்த புகார் தான் விஸ்வரூபம் எடுத்தது. அதோடு மஹுவா மொய்த்ராவின் பதவியை பறிக்க வேண்டும் என தனது புகாரில் குறிப்பிட்டு இருந்ததோடு, வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹாத்ராயின் புகார் விஷயங்களை முழுவதுமாக குறிப்பிட்டு இருந்தார்.

அக்டோபர் 16: தன்மீதான புகார் தொடர்பான எத்தகைய விசாரணையையும் சந்திக்க தயார். அதானி குறித்து பேசிய எனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் தயாராக இருக்கின்றனர் என மஹுவா மொய்த்ரா எம்பி ட்விட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார்.

அக்டோபர் 17: பாஜக எம்பி நிஷிகாந்த் துபே அளித்த புகாரை நாடாளுமன்ற லோக்சபா நெறிமுறைக்குழுவின் விசாரணைக்கு அனுப்பி உத்தரவிட்டார்.

அக்டோபர் 19: மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் தொழிலதிபர் தர்ஷன் ஹிராந்தன் மத்திய அரசிடம் கேள்விகள் கேட்க மஹுவா மொய்த்ரா எம்பி இணையதள பாஸ்வேர்ட் பயன்படுத்தியதாக கூறினார். மேலும் மஹுவா மொய்த்ரா எம்பியுடன் நட்பு இருப்பதாகவும், அவர் கேட்கவேண்டிய கேள்விகள் குறித்த விஷயங்களை நான் தெரிவித்ததாகவும் தெரிவித்தார். மேலும் இதற்கான தன்னிடம் இருந்து பரிசு பொருட்கள், பணம் பெற்றதாகவும் அறிக்கை வெளியிட்டார்.

அக்டோபர் 31: விசாரணைக்கு ஆஜராகும்படி நாடாளுமன்ற நெறிமுறை குழு சம்மன் அனுப்பியதாக மஹுவா மொய்த்ரா வலைதளங்களில் பதிவிட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நவம்பர் 2: மஹுவா மொய்த்ரா நாடாளுமன்ற நெறிமுறைக்குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.

நவம்பர் 10: நாடாளுமன்ற நெறிமுறைக்குழு 470 பக்கங்கள் கொண்ட விசாரணையை அறிக்கையை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் ஒப்படைத்தது. அதில் மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவியை பறிக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.

டிசம்பர் 8: மஹுவா மொய்த்ரா எம்பியின் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைக்குழுவில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த குழுவின் தலைவரான பாஜகவின் வினோத் குமார் சோங்கர் அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து கடும் அமளி ஏற்பட்ட நிலையில் நாடாளுமன்ற லோக்சபா எம்பி பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா எம்பியின் பதவி பறிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை லோக்சபா எம்பி ஓம்பிர்லா வெளியிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+