குழந்தைகளின் பாலியல் வீடியோக்களை பார்த்த நபர்.. கைது செய்ய சென்ற சிபிஐ மீது தாக்குதல்.. பரபரப்பு!
புவனேஷ்வர்: ஒடிசாவில் செல்போனில் குழந்தைகளின் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான வீடியோக்களை பார்த்த நபரை கைது செய்ய சென்ற சிபிஐ அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிபிஐ அதிகாரிகள் தாக்கப்பட்ட காட்சிகளின் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதாலும், அதை கொடூர மனம் படைத்தவர்கள் பார்த்து ரசிப்பதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதுமட்டுமின்றி இந்த வீடியோக்கள் இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் டெலிகிராம், வாட்ஸ்அப், பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.

சிபிஐ வசம்
பாலியல் வீடியோக்கள் தொடர்பான விவகாரம் சிபிஐ வசம் செல்ல நாடு முழுவதும் செல்போனில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வீடியோக்களை பார்ப்பவர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோக்களை உருவாக்குபவர்கள் மீது சிபிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக தமிழகம் உள்பட 14 மாநிலங்களை சேர்ந்த 83 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் அதிகம் பகிர்வு
இதுமட்டுமின்றி கொரோனாவால் ஊரடங்கில் இருந்த காலத்தில்தான் மிக அதிகமாக பாலியல் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் பார்க்கப்பட்டதாகவும், பகிரப்பட்டதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால்தான் யாருமே செல்போனிலோ அல்லது சமூக வலைதளங்களிலோ, கணினியிலோ பாலியல் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் வைத்திருக்கக்கூடாது, பகிரக்கூடாது என இந்தியாவில் சட்டம் இயற்றப்பட்டது. அதுவும் முக்கியமாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வீடியோக்களை பார்க்கவே கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காதவர்கள் சிக்கினர்
ஆனால் இதைக் கண்டுக் கொள்ளாமல் பாலியல் ரீதியான வீடியோக்களை தங்களது செல்போனில் பார்த்த சில இளைஞர்கள் போலீசாரிடம் சிக்கி எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டனர். இதனால் பெரும்பாலான நபர்களின் செல்போன்கள் சோப்பு போட்டு துவைத்த துணி போல சுத்தமாக உள்ளது. அதற்குக் காரணம் எதையாவது பார்த்துவிட்டு தேவையில்லாத வம்பில் சிக்குவது ஏன் என்பதுதான்.

ஒடிசாவில் சிக்கிய நபர்
இதற்கிடையே இதே குற்றச்சாட்டில் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க ஒடிசா மாநிலத்தில் உள்ள தேன்கனல் மாவட்டத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றுள்ளனர்.தேன்கனல்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக நாயக் என்பவரை கைது செய்தனர். பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறி அவரை கைது செய்தனர்.

கிராம மக்கள் போராட்டம்
இதை அறிந்த நாயக்கின் உறவினர்கள், கிராம பெண்கள் என அனைவரும் திரண்டனர். பல பெண்கள் கையில் கம்புகள் உள்ளிட்ட ஆயுதங்களால் சிபிஐ அதிகாரிகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதில் சில சிபிஐ அதிகாரிகள் தாக்கப்பட்டனர். ஒரு சிலர் வாகனத்திற்கு வழிவிடாமல் தரையில் அமர்ந்து போராடினர். இதற்கிடையே தனக்கு எதுவும் தெரியாது என்றும், தான் ஒரு நிரபராதி என்றும் நாயக் தெரிவித்ததை சிபிஐ ஏற்க மறுத்துவிட்டனர்.

வீடியோ வெளியானது
ஒரு வழியாக கிராம மக்களை அப்புறப்படுத்தி சிபிஐ அதிகாரிகளும், போலீசாரும் நாயக்கை அழைத்துச் சென்றனர். இந்நிலையில் கிராம மக்களால் சிபிஐ அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications