காவிரி விவகாரம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் கர்நாடகா
பெங்களூர்: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறந்துவிடும் உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு மறுசீராய்வு மனுவை இன்று தாக்கல் செய்யும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நாளொன்றுக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடக மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் தீர்ப்பை ஏற்று கர்நாடகா தமிழகத்திற்கு நீர் திறந்துவிட்டுள்ளது. இதற்கிடையே பெங்களூரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் செவ்வாய்க்கிழமை இரவு அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா கூறுகையில்,
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுவது சட்டத்திற்கு எதிரானது என்பதால் நீரை திறந்துவிடுவது என்று தீர்மானித்துள்ளோம். இந்த ஆண்டு வழக்கத்தை விட குறைவாக மழை பெய்துள்ளது. இதனால் மைசூர், மாண்டியா, பெங்களூர் உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விவசாயத்திற்கும், குடிப்பதற்கும் தண்ணீர் இல்லாத நிலையில் தான் தமிழகத்திற்கு நீரை திறந்துவிட உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து புதன்கிழமை மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்வோம். மேலும் இது பற்றி காவிரி நீர் மேலாண்மை வாரியத்திடம் முறையிடவும் முடிவு செய்துள்ளோம்.
கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரை தமிழகத்திற்கு 94 டி.எம்.சி. நீரை திறந்துவிட வேண்டும். ஆனால் மழை சரியாக பெய்யாததால் 33 டி.எம்.சி. திறந்துவிட்டோம் என்றார்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications