சிபிஐ கூண்டு கிளியும் அல்ல- காங்கிரஸின் அங்கமும் அல்ல: ப.சிதம்பரம்
டெல்லி: சிபிஐ அமைப்பு என்பது கூண்டு கிளியும் அல்ல ... காங்கிரஸ் கட்சியின் ஒரு அங்கமும் அல்ல என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில், சிபிஐ ஒரு கூண்டு கிளி போல இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் விமர்சித்திருந்தது. இந்த விமர்சனத்தை நிராகரிக்கும் வகையில் டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் மாநாட்டில் ப.சிதம்பரம் இன்று பேசினார்.
டெல்லி மாநாட்டில் பேசிய ப.சிதம்பரம், உலக அளவிலான விசாரணை அமைப்புகள் சிபிஐதான் சிறப்பாக செயபடுகிறது. ஊழல் மற்றும் குற்றங்களை ஒழிக்க பொது செயல்திட்டங்கள் அவசியமானது. சில நேரங்களில் சிபிஐ முட்டுக்கட்டுகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.

பொருளாதார குற்றங்கள் இப்பொழுது அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது. சிபிஐ அமைப்பை கூண்டு கிளி என்று சொல்வதிலோ அல்லது காங்கிரஸின் ஒரு அங்கம் என்று சொல்வதிலே உண்மை எதுவும் இல்லை என்றார்.
சிபிஐ அமைப்பு அரசியல் சட்ட அந்தஸ்து கொண்டது அல்ல என்று அண்மையில் குவஹாத்தி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து நேற்று சிபிஐ அதிகாரிகள் மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், இந்த அமைப்பின் சட்ட அந்தஸ்தை நிலைநாட்டுவோம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications