தமிழகத்துக்கு நல்ல செய்தி.. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணி தொடங்கியது: நீர்வளத்துறை செயலாளர்
டெல்லி: சுப்ரீம் கோர்ட் உத்தரவுப் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில், இது தொடர்பாக வழக்கை செப். 20ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நான்கு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், காவிரி பிரச்சனைத் தொடர்பாக மத்திய அமைச்சர் உமாபாரதி தலைமையில் இரு மாநில முதல்வர்கள் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. கர்நாடகத்தின் சார்பில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையாவும் தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் உறுதியான எந்த முடிவும் எட்டப்படவில்லை.
என்றாலும், காவிரி பிரச்சனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசிசேகர், "உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடி 4 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும், அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டது" என்றும் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பத்தில் கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இனி என்ன செய்யப் போகிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். உமா பாரதியின் கர்நாடக ஆதரவையும் மீறி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முயற்சி எடுத்திருப்து குறிப்பிடத்தக்கது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications