காவிரி விவகாரம்: மத்திய அரசு அரசியல் செய்கிறது.. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சரமாரி குற்றச்சாட்டு
காவிர விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்வதாக தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது.
Recommended Video

டெல்லி: காவிர விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்வதாக தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி நீர் பங்கீட்டிற்கான வரைவு அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டது.
கர்நாடகா தேர்தலை காரணம் காட்டி காவிரி வழக்கில் தற்போது 3-வது முறையாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அவகாசம் கோரியது. பிரதமரும், அமைச்சரும் தேர்தல் பிரச்சாரத்தில் உள்ளதால் ஒப்புதல் பெற முடியவில்லை என்று தெரிவித்தது.

அவகாசம் வேண்டும்
வாரியத்திற்கான செயற்பாட்டு வரைவு அறிக்கை பிரதமருக்கு அனுப்பப்பட வேண்டியுள்ளது என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் வரைவு திட்டம் தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

அரசியல் செய்கிறது
இந்நிலையில் காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது தமிழக அரசு சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளது. அதாவது காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்கிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

எப்படி நம்ப முடியும்?
மத்திய அரசின் நடவடிக்கைகள் கூட்டாட்சி தத்துவத்துக்கு
எதிரானது என்றும் இத்தனை நாட்களாக எந்த திட்டத்தையும் இறுதி செய்யாத மத்திய அரசு , 10 நாட்களில் செயல்திட்டத்தை தாக்கல் செய்வோம் என்பதை எப்படி நம்ப முடியும் ? என்றும் தமிழக அரசு கேள்வி எழுப்பியுள்ளது.

மக்களிடம் என்ன சொல்ல முடியும் ?
காவிரி வாரியம் அமைக்க வேண்டுமென தீர்ப்பளித்து 2 மாதமாகியும் எந்த நடவடிக்கையும் இல்லையென்றால் எங்கள் மக்களிடம் என்ன சொல்ல முடியும் ? என்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications