அப்படி போடு தகிட தகிட.. சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி.. இந்தியா டுடே எக்ஸிட் போல் கணிப்பு
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான எக்ஸிட் போல் முடிவுகள் வெளியான நிலையில் காங்கிரஸ் கட்சியே ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என இந்தியா டுடே ஆக்ஸிஸ் மை இந்தியா கணித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் இரு கட்டங்களாக நடந்து முடிந்தன. 20 தொகுதிகளுக்கு நவம்பர் 7ஆம் தேதி முதல் கட்டமாகவும் நவம்பர் 17ஆம் தேதி 70 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தலும் நடந்து முடிந்தன. மொத்தம் 90 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 78 சதவீதம் பேர் வாக்களித்தனர்.

கடந்த 2018-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி 17இடங்களிலும் பாஜக 2 இடங்களிலும் ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் ஒரு இடத்திலும் வென்றது. இந்த முதல் கட்ட தேர்தலான நவம்பர் 7ஆம் தேதி நக்ஸலைட்டுகளால் சுக்மா மாவட்டத்தில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.
இதையடுத்து பனாவர் கிராமத்திலும் பாண்டா வாக்குச் சாவடியையும் சுற்றியும் என்கவுன்ட்டர்கள் நடந்தன. சத்தீஸ்கர் முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 40,78,689 பேர் வாக்காளர்கள். இவர்களில் பெண் வாக்காளர்கள் 20,84,675 பேர்; ஆண் வாக்காளர்கள் 19,93,936; 69 பேர் மூன்றாம் பாலினத்தவர். மொத்தம் 1,64,299 பேர் முதல் முறையாக வாக்களிக்கும் புதிய வாக்காளர்கள் உள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இருமுனைப் போட்டி நிலவியது. ஆளும் காங்கிரஸ் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் இடையே கடும் போட்டி உள்ளது. மாநில முதல்வராக காங்கிரஸின் பூபேஷ் பாகல் பதவியில் உள்ளார். சத்தீஸ்கர் மாநில முதல் கட்ட தேர்தலில் 223 பேர் வேட்பாளர்கள். இவர்களில் 25 பேர் பெண்கள்.
2ஆம் கட்ட தேர்தலின் போது 958 வேட்பாளர்கள் இருந்தனர். இவர்களில் 827 பேர் ஆண்கள், 130 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை. இந்த தேர்தலில் சில தொகுதிகளில் பாஜக காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது. பதான் சட்டசபை தொகுதியில் மாமா முதல்வர் பூபேஷ் பாகலுக்கும் மருமகன் விஜய் பாகலுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இவர்கள் இருவரும் இதுவரை 3 முறை போட்டியிட்டுள்ளனர். 2003, 2008, 2013 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் 2008 இல் மட்டுமே பூபேஷை விஜய் வென்றுள்ளார்.
பூபேஷ் கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் பதான் தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். அம்பிகாபூரில் சத்தீஸ்கர் துணை முதல்வரும் காங்கிரஸ் கட்சி தலைவருமான டி.எஸ். சிங் தேவ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக தலைவரும் தொழிலதிபருமான ராஜேஷ் அகர்வால் போட்டியிடுகிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தேவ்தான் 3 முறை தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்து வருகிறார். அவர்தான் சத்தீஸ்கரின் பணக்கார எம்எல்ஏ ஆவார்.
சீதாபூரில் உணவு மற்றும் கலாச்சார துறை அமைச்சர் அமர்ஜீத் பாகத்தும் பாஜக தலைவர் ராம் குமார் டோப்போவுக்கும் இடையே போட்டி நடைபெறுகிறது. அது போல் கார்சியாவில் சத்தீஸ்கரின் விளையாட்டு மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் உமேஷ் படேலுக்கும் பாஜக தலைவர் மகேஷ் சாஹுவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
இப்படியாக மொத்தம் 15 தொகுதிகளில் நட்சத்திர போட்டியாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த மாநிலத்தில் முக்கிய பிரச்சினைகளாக ஊழல், விவசாயிகளின் பிரச்சினை, பழங்குடியினர் பிரச்சினை , நக்ஸலைட்டுகள் பிரச்சினை ஆகியவை ஆகும்.
இந்த நிலையில் இந்த மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சூழலில் இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின. அதில் இந்தியா டுடே ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனம் வெளியிட்ட கணிப்பில் காங்கிரஸ் 45 இடங்களிலும் பாஜக 41 இடங்களிலும் மற்றவை 5 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
90 தொகுதிகளில் 45 அல்லது 46 என்பது பெரும்பான்மைக்கு தேவை. அப்படியிருக்கும் பட்சத்தில் கருத்து கணிப்பின்படி காங்கிரஸ் 45 இடங்களை பெற்றுள்ளது. எனினும் பாஜக 41 இடங்களை பெற்றுள்ளதால் உள்ளூர் கட்சிகளுடன் குதிரை பேரம் நடத்தப்பட்டு ஆட்சி அமைக்க உரிமை கோரும் சூழல்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications