சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை.. பாதுகாப்பு படையினர் 3 பேர் பலி! 14 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் - பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் சில மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் காணப்படுகிறது. மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டையின் போது அவ்வபோது பாதுகாப்பு படையினருக்கும் மவோயிஸ்டுகளுக்கும் இடையே மோதல் நடப்பதையும் காண முடிகிறது.

Chhattisgarh encounter with Maoists on Sukma - Bijapur border 3 security personnel killed

அந்த வகையில், சத்தீஸ்கரில் உள்ள பிஜாபூர்- சுக்மா எல்லையை ஒட்டிய பகுதியில் மவோய்ஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. தெகல்குடேன் என்ற கிராமத்தில் நக்சல் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி கிராமப்புற மக்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிக்காக பாதுகாப்பு முகாம் அமைக்கும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த முகாம் அமைக்கும் பணி முடிந்த நிலையில், CoBRA/STF/DRG என்ற பிரிவு பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரின் பதிலடி தாக்குதலை சமாளிக்க முடியாத மாவோயிஸ்டுகள் வனப்பகுதிக்குள் ஓடிவிட்டனர். இந்த என்கவுண்டரில் பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் பலியாகினர். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயம் அடைந்த வீரர்கள் ராய்ப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தற்போது என்கவுண்டர் நடைபெற்ற இதே இடத்தில்தான் கடந்த 2021 ஆம் ஆண்டு மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நண்டைபெற்றது. இந்த சண்டையில் பாதுகாப்பு படை வீரர்கள் 23 பேர் கொல்லபப்ட்டனர். 33 பேர் காயம் அடைந்தனர்.

பலியான வீரர்களின் உடலை மீட்க மட்டும் 2 நாட்கள் பாதுகாப்பு படையினருக்கு தேவைப்பட்டது. தற்போது மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் மாவோயிஸ்டு அமைப்பை சேர்ந்த 59 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஜூலை மற்றும் டிசம்பர் மாத கால கட்டத்தில் 173 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+