ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் ப.சிதம்பரத்தின் சொத்து மதிப்பு ரூ.95 கோடி !
மும்பை: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது சொத்து மதிப்பு ரூ.95 கோடி என வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 15 மாநிலங்களில் இருந்து வரும் ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மொத்தம் 57 உறுப்பினர்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி ஜூன் 29ம் தேதியோடு காலாவதியாக உள்ளது. இதற்கான தேர்தல் வரும் ஜூன் 11 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதில் தனது குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.95 கோடி என அவர் தெரிவித்துள்ளார்.
சொத்துப்பட்டியல் தொடர்பான 22 பக்கங்கள் கொண்ட ஆவணத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் ப.சிதம்பரம் ஒப்படைத்தார். அதில், தனது குடும்பத்திற்கு அசையும் சொத்துக்களாக ரூ.54.30 கோடியும், அசையா சொத்தாக ரூ.41.35 கோடியும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
2014-15ம் ஆண்டில் தனக்கு ரூ.8.58 கோடி வருமானம் வந்துள்ளதாகவும், தனது மனைவி நளினி சிதம்பரத்திற்கு ரூ.1.25 கோடி வருமானம் வந்துள்ளதாகவும் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். தன்னிடம் கையிருப்பில் ரூ.3.50 லட்சம் ரொக்கமும், தனது மனைவி நளினியிடம் ரூ.1.24 லட்சமும் உள்ளதாகவும், தனது பெயரில் டெல்லி, கர்நாடகா, சென்னை ஆகிய நகரங்களில் 13 வங்கிக் கணக்குகளும், மனைவி நளினியின் பெயரில் 6 வங்கிக் கணக்குகளும் உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசையும் சொத்துக்கள் பட்டியலில் தன்னிடம் 32 கிராம் தங்கம், 3.25 கேரட் வைரமும், தனது மனைவி நளினியிடம் 1.43 கிலோ தங்கமும் (மதிப்பு ரூ.39.17 லட்சம்). ரூ.20.46 லட்சம் மதிப்பிலான 52 கிலோ வெள்ளி பொருட்களும், ரூ.22.98 லட்சம் மதிப்பிலான 76.61 கேரட் வைரமும் உள்ளதாக சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
1994இல் கர்நாடகாவில் ரூ.25.16 லட்சம் மதிப்பில் வாங்கிய 38.72 ஏக்கர் நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.1.93 கோடி எனவும் தன்னிடம் சொந்தமாக ஹோண்டா மற்றும் ஸ்கோடா கார் உள்ளதாகவும், மனைவி நளினியிடம் இன்னோவா கார் உள்ளதாகவும் சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
தான் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் என்றும், நளினி சிதம்பரம் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் என்றும் ஆவணத்தில் தெரிவித்துள்ள ப.சிதம்பரம், தனக்கு முகநூல் கணக்கு இல்லையென்றும், ஆனால் ட்விட்டர் கணக்கு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications