பிரதமர் வேட்பாளரின் பெயரை காங்கிரஸ் அறிவிக்க வேண்டும்: ப. சிதம்பரம் "திடீர்" குரல்
டெல்லி: பிரதமர் பதவிக்கான வேட்பாளரின் பெயரை காங்கிரஸ் கட்சி அறிவிக்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த ப.சிதம்பரம், மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைத்தால், பிரதமராக பொறுப்பேற்கப் போவது யார் என்பதை கட்சி தெரிவிக்க வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

தற்போதைய காலகட்டத்தில், மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தல்களில் கூட, யார் உங்கள் தலைவர் என்றுதான் கட்சியினரிடம் மக்கள் கேட்கின்றனர்.
பல மாநில சட்டசபை தேர்தல்களில், முதல்வர் வேட்பாளர்களுக்கு இடையேதான் போட்டி நிலவுகிறது. இதுதான் தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்றார்.
லோக்சபா தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியை அறிவித்து பாஜக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
ஆனால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியோ இதுவரை பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமல் உள்ளது. வரும் 17ந் தேதி காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் திடீரென ப. சிதம்பரம் பிரதமர் வேட்பாளர் யார் என அறிவிக்க கோரி இருப்பது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி











Click it and Unblock the Notifications