கணவன்-மனைவி போல நடித்து, அமெரிக்காவுக்கு குழந்தைகளை கடத்திய கும்பல் பெங்களூரில் கைது!
பெங்களூர்: சிறுவர் சிறுமிகளை கடத்தி அமெரிக்காவில் விற்பனை செய்து வந்த, பெண்கள் உள்ளிட்ட 16 பேர் கொண்ட கும்பலை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர். நகர கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹரிசேகரன் தலைமையிலான போலீஸ் படை இந்த பெரும் மோசடியை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த ஹரிசேகரன் கூறியதாவது: உ.பி., பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து, 10 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளை பெங்களூருக்கு கடத்திவந்து, போலியாக பாஸ்போர்ட், விசா பெற்று, அவர்களை அமெரிக்காவில் விற்பனை செய்து வந்த, 2 பெண்கள் உள்ளிட்ட 16 பேர் கொண்ட கும்பலை சிறப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
#PressMeet by @AddlCPEast @ Office of the Commissioner of Police. pic.twitter.com/hkmF5frtxO
— P.HARISHEKARAN IPS (@AddlCPEast) February 8, 2016
பெங்களூரிலுள்ள ஏழை தம்பதிகள் அல்லது வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்த ஆண்-பெண்களை கணவன் மனைவியாக நடிக்க வைத்து, கடத்தி வரப்படும் குழந்தைகளுக்கு அவர்கள்தான் பெற்றோர் என்பது போல ஆவணங்களை தயாரித்து ஜோடிப்பது இக்கும்பல் வழக்கம்.
கடத்தி வரப்படும் குழந்தைகளுக்கு இந்த தம்பதிகள்தான், பெற்றோர் என்று ஜோடிப்பதற்காக, வீட்டு அக்ரிமென்ட், ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற பல ஆவணங்களை வாங்கிக்கொடுப்பதற்கு ஒரு கும்பல் செயல்பட்டுள்ளது. பின்னர், இந்த ஆவணங்களை கொண்டு, சென்னையிலுள்ள அமெரிக்க தூரகம் மூலமாக அமெரிக்காவுக்கு சுற்றுலா விசா எடுத்துக்கொடுப்பதற்காக ஒரு கும்பல் செயல்பட்டுள்ளது.
கடத்தல், ஆவண தயாரிப்பு, விசா பெறுதல் போன்ற வேலைகளுக்கு வெவ்வேறு கும்பல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. விசா கிடைத்ததும், அமெரிக்கா செல்லும் அந்த 'குடும்பம்' அதிகபட்சம் ஒரு வாரம் அங்கு தங்கியிருக்கும். பின்னர், குழந்தைகளை அங்கேயே விட்டுவிட்டு, ஆணும், பெண்ணும் மட்டும் இந்தியா திரும்பிவிடுவது வழக்கம்.
ஒரு தம்பதிகளோடு அதிகபட்சம் 3 குழந்தைகளை அனுப்புவது இந்த கும்பலின் வாடிக்கையாக இருந்தது. அமெரிக்காவில் விடப்படும் குழந்தைகள் என்ன செய்யப்படுகிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்திவருகிறோம். இவ்வாறு ஹரிசேகரன் தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications