இந்தியாவை சீண்ட வேண்டாம்.. லடாக் பிரச்சனையில் அடுத்தடுத்து பின்வாங்கும் சீனா.. என்ன நடந்தது? பின்னணி
லடாக்: இந்தியாவுடன் லடாக் எல்லையில் நடக்கும் பிரச்சனையை தீர்க்க உறுதியாக இருக்கிறோம் என்று சீனா தெரிவித்து உள்ளது. லடாக் பிரச்சனையில் சீனா கொஞ்சம் பின் வாங்க தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
கடந்த ஒரு மாதமாக இந்தியா சீன இடையே எல்லை பிரச்சனை நடந்து வருகிறது. மே 5ம் தேதி லடாக் எல்லையில் சீனாவில் ஹெலிகாப்டர் எல்லை மீறி உள்ளே வந்தது. அப்போது தொடங்கியது பிரச்சனை பின் சிக்கிமில் மோதலை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இரண்டு நாட்டு பிரச்சனை தற்போது எல்லையில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதை தீர்க்கும் வகையில் இன்று இரண்டு நாட்டு ராணுவத்தை சேர்ந்த லெப்டினன் ஜெனரல்கள் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள்.

என்ன பேசுவார்கள்
இரண்டு நாட்டு லெப்டினன் ஜெனரல்கள் இன்று கிழக்கு லடாக் குறித்து பேச உள்ளனர். அங்குதான் அடிக்கடி மோதல்கள் ஏற்படுகிறது. பாங்காங் திசோ பகுதியில் இருக்கும் எட்டு கட்டுப்பாட்டு பகுதிகளை யார் கட்டுப்படுத்துவது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதுதான் மோதலுக்கு காரணம். இந்த எட்டு கட்டுப்பாட்டு பகுதியில் 4 இடங்களை இந்தியாவும், 4 இடங்களை சீனாவும் கட்டுப்படுத்துகிறது.

பின்வாங்கிய சீனா
இந்த நிலையில் எல்லை பிரச்சனையில் சீனா கொஞ்சம் கொஞ்சமாக பின் வாங்க தொடங்கி உள்ளது. வேகமாக படைகளை குவித்து, போருக்கு தயார் ஆவது போல் சீனா தயார் ஆகி வந்தது. ஆனால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக எல்லையில் சீனா படைகளை விலக்கி கொள்ள தொடங்கி உள்ளது. முக்கியமாக பாங்காங் திசோ பகுதியில் 2 கிமீ தூரத்திற்கு சீனா பின் வாங்கி இருக்கிறது.

என்ன கருத்து
இந்த நிலையில் இந்தியாவுடன் லடாக் எல்லையில் நடக்கும் பிரச்சனையை தீர்க்க உறுதியாக இருக்கிறோம் என்று சீனா தெரிவித்து உள்ளது. சீனா இதில் கொஞ்சம் பின் வாங்க தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், எல்லையில் தற்போது பெரிய அளவில் பிரச்சனை இல்லை. இந்தியாவுடன் அமைதியான போக்கே நிலவுகிறது.

தீர்வு முக்கியமா
இந்தியாவுடன் உள்ள பிரச்னையை தீர்க்க உறுதியாக இருக்கிறோம். எல்லை பிரச்சனையை சரி செய்ய இரண்டு நாடுகளும் முக்கிய கொள்கைகளை, திட்டங்களை வைத்து இருக்கிறது. ராணுவ ரீதியான, ராஜாங்க ரீதியான பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்த பிரச்சனையை முறையாக சரி செய்ய இருக்கிறோம். இந்தியாவுடன் எல்லையில் அமைதியை கடைபிடிக்க விரும்புகிறோம், என்று சீனா கூறியுள்ளது.

ஏன் இப்படி
சீனாதான் லடாக் எல்லையில் முதலில் அத்துமீறியது. இந்தியா மீது சீனா கோபமாக இருக்க திடீர் காரணம் என்ன என்றும் இன்னும் முழுமையாக தெரியவில்லை. இந்த நிலையில் தற்போது சீனா எல்லையில் பின்வாங்க தொடங்கி உள்ளது. அதேபோல் சீனாவின் வெளியுவுத்துறையும் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று கூறுகிறது. அந்நியனாக இருந்த சீனா திடீரென அம்பியாகி உள்ளது. சீனா இப்படி பின்வாங்க காரணம் என்ன என்று கேள்வி எழுந்துள்ளது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications