பிரதமர் மோடியின் அருணாசல பிரதேச பயணத்துக்கு சீனா எதிர்ப்பு
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் அருணாசல பிரதேச பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாசல பிரதேசத்துக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என்றும் அந்நாடு வரைபடம் வெளியிட்டது.

மேலும் "இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில், உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்ய தாயார், ஆனால் அருணாசல பிரதேசத்தில் முதலீடு செய்யப்பட மாட்டாது, ஆனால் ஜப்பான் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றே பார்க்கிறது" என்று ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் கிஷிடா கூறியிருந்தார். இக்கருத்துக்கு சீனா கண்டனம் தெரிவித்து, ஜப்பானை கடுமையாக விமர்சித்தது.
இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்துக்கு நேற்று பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு டெல்லிக்கான ரயில் சேவையை தொடங்கி வைத்து பேசிய மோடி, மாநிலத்தின் வளர்ச்சிக்காக, அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்த பில்லியன் கணக்கில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 28 ஆண்டுகளாக கண்டிராத வளர்ச்சியை அருணாச்சல பிரதேசம் மாநிலம் அடுத்த 5 ஆண்டுகளில் காணும் என்றார்.
பிரதமர் மோடியின் இந்த பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள சீனா, இது இருதரப்பு உறவுக்கு உகந்தது அல்ல என்றும் கூறியுள்ளது. மேலும் "அருணாச்சல பிரதேசம் என்று அழைப்பதை சீன அரசு ஒருபோதும் அங்கீகாரம் செய்யாது" என்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications