திருப்பி அனுப்புங்கள்.. சீனா சிறைபிடித்த 10 இந்திய வீரர்கள்.. அதிரடியாக மீட்பு.. எப்படி நடந்தது?
லடாக்: சீனா ராணுவத்தால் பிடிக்கப்பட்டு இருந்த 10 இந்திய ராணுவ வீரர்கள் நேற்று எல்லையில் மீண்டும் இந்தியாவிடம் திருப்பி அனுப்பப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
Recommended Video
இந்தியா - சீனா இடையில் லடாக், சிக்கிம், அருணாசலப்பிரதேசம் ஆகிய எல்லைகளில் சண்டை நடந்து வருகிறது. இதில் சிக்கிம், லடாக் பிரச்சனை மோசமாகி உள்ளது. லடாக்கில் இரண்டு நாட்டு வீரர்கள் மாற்றி மாற்றி தாக்கிக் கொள்ளும் நிலைக்கு சூழ்நிலை சென்றுள்ளது.
லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில் நடந்த சண்டைக்கு பின் இந்த பிரச்சனை பெரிதாகி உள்ளது . அங்கு கடந்த 15-16 தேதிகளில் நடந்த சண்டையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

காயம்
இந்த சண்டையின் போது சீனாவின் ராணுவ வீரர்கள் கூரான ஆயுதங்களை வைத்து தாக்கியதில் இந்திய வீரர்கள் 77 பேர் மோசமாக காயமடைந்தனர். இந்த காயம் காரணமாக மொத்தம் 4 வீரர்கள் உயிருக்கு போராடி வந்தனர். ஆனால் அவர்கள் உடல்நிலை நேற்று கொஞ்சம் சீரானது. தற்போது இந்த 77 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் விரைவில் பணிக்கு திரும்புவார்கள் என்கிறார்கள்.

கைதி
இந்த சண்டையின் போது இந்திய வீரர்கள் காயம் அடைந்தது மட்டுமின்றி 10 இந்திய ராணுவ வீரர்களை சீன ராணுவம் சிறைபிடித்தது. இவர்களை கட்டிப்போட்டு சீன ராணுவம் தங்களது முகாமிற்கு அழைத்து சென்றது. 16ம் தேதி அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் சீனாவின் முகாமில்தான் வைக்கப்பட்டு இருந்தனர்.

என்ன பேச்சுவார்த்தை
இந்த நிலையில் நேற்று இரண்டு நாட்டு ராணுவத்தின் மேஜர் ஜெனரல்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் 10 இந்திய வீரர்களையும் உடனே ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்தது. இந்திய வீரர்களை சீனா ஒப்படைக்கவில்லை என்றால் கடுமையான விளைவுகளை சீனா சந்திக்க நேரிடும் என்று இந்திய மேஜர் ஜெனரல் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

மீண்டும் இந்தியா
இந்த நிலையில் சீனா ராணுவத்தால் பிடிக்கப்பட்டு இருந்த 10 இந்திய ராணுவ வீரர்கள் நேற்று எல்லையில் மீண்டும் இந்தியாவிடம் திருப்பி அனுப்ப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கிறது. நேற்று மாலையே இவர்கள் எல்லோரும் திருப்பி அனுப்ப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில் சிலர் மோசமாக காயம் அடைந்துள்ளனர். சீன ராணுவத்திடம் இந்திய வீரர்கள் யாரும் இப்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications