அந்த 4 இடங்கள்.. மீண்டும் இன்று பேச்சுவார்த்தை நடத்திய இந்திய - சீன ராணுவ அதிகாரிகள்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

லடாக்: லடாக் எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் இன்று மீண்டும் இரண்டு நாட்டு ராணுவத்திற்கு இடையே எல்லையில் பேச்சுவார்த்தை நடந்தது.

கடந்த மே 5ம் தேதியில் இருந்து இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. சிக்கிம் எல்லையில் முதலில் அத்துமீறிய சீனா அதன்பின் லடாக் எல்லையில் அத்துமீறியது. தொடர்ந்து லடாக் எல்லையில் சீனா படைகளை குவித்தது.

இதனால் இந்தியாவும் அங்கே படைகளை குவித்தது. இதையடுத்து லடாக் எல்லையில் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது.

ஆனால் பேச்சுவார்த்தை

ஆனால் பேச்சுவார்த்தை

இதை தொடர்ந்து முக்கியமான பேச்சுவார்த்தை கடந்த சனிக்கிழமை நடந்தது. இந்தியா - சீனா எல்லை பிரச்சனை தொடர்பாக கடந்த வாரம் தான் இரண்டு நாட்டு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்தியாவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் மற்றும் சீனாவின் மேஜர் ஜெனரல் லியு லின் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.இதில் எல்லையில் பேச்சுவார்த்தை மூலம் அமைதியை கொண்டு வர இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டது.

மீண்டும் நடந்தது

மீண்டும் நடந்தது

இந்த நிலையில் இன்று மீண்டும் இரண்டு நாட்டு ராணுவத்திற்கு இடையே எல்லையில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்திய ராணுவத்தின் மேஜர் ஜெனரல் மற்றும் சீன ராணுவத்தின் மேஜர் ஜெனரல் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. எல்லையில் படைகளையே வாபஸ் வாங்குவது எப்படி, எங்கே படைகளை வாபஸ் வாங்க கூடாது என்பது தொடர்பான ஆலோசனைகள் செய்யப்பட்டது. 2 மணி நேரம் இந்த மீட்டிங் நடந்ததாக கூறுகிறார்கள் .

எதை பற்றி

எதை பற்றி

இந்த ஆலோசனையில் கல்வான் பகுதியில் படைகளை சீனா திரும்ப பெற வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. கல்வான் பகுதி , PP 14, PP 15 மற்றும் 17A ஆகிய நான்கு பகுதிகள் குறித்து இன்று ஆலோசனை செய்யப்பட்டது. இந்த நான்கு பகுதிகளில் இருந்து சீனா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளும் படைகளை திரும்ப பெற வேண்டும். அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்று ஆலோசனை செய்யப்பட்டது.

தொடர்கிறது

தொடர்கிறது

ஆனால் லடாக் அருகே இருக்கும் பாங்காங் திசோ பகுதியில் சீன ராணுவம் பின்வாங்காமல் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. அங்கு படைகளை திரும்ப பெற சீனாவின் பிஎல்ஏ ராணுவம் மறுத்து வருகிறது. பாங்காங் திசோ பகுதியில் இருந்து சீனா தனது படைகளை திரும்ப பெறவில்லை. இந்த பாங்காங் திசோவில்தான் வரும் காலத்தில் பெரிய அளவில் பிரச்சனை நடக்கும் என்று கூறுகிறார்கள். இந்த இடம் மிகவும் முக்கியமானது ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+