அம்பலமான தந்திரம்.. பாங்காங் திசோவில் படகுகளை இறக்கிய சீனா.. புதிய டென்ட்கள்.. படைகள் குவிப்பு!

Subscribe to Oneindia Tamil

லடாக்: லடாக்கில் இருக்கும் பாங்காங் திசோ பகுதியில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. அங்கு தற்போது சீனா நவீன படகுகளை குவித்து உள்ளது. அதேபோல் அங்கு சீனா டென்ட்களை அமைத்து வருகிறது.

Recommended Video

    China brings More boats and Additional troops at Pangong Lake | Oneindia Tamil

    லடாக்கில் இருக்கும் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து பின்வாங்குவதாக சீனா கடந்த 6ம் தேதி இந்தியாவிடம் உறுதி அளித்தது. எல்லையில் இருக்கும் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து 2 கிமீ தூரத்திற்கு பின் வாங்குவதாக சீனா உறுதி அளித்தது.

    அதேபோல் சீனாவும் எல்லையில் கல்வான், டெப்சாங் போன்ற சில இடங்களில் இருந்து படைகளை வாபஸ் வாங்கியது. ஆனால் பாங்காங் திசோ, ஹாட்ஸ்பிரிங்ஸ் போன்ற சில இடங்களில் படைகளை வாபஸ் வாங்காமல் தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொண்டு வந்தது.

    இப்போது என்ன

    இப்போது என்ன

    இந்த நிலையில் லடாக்கில் இருக்கும் பாங்காங் திசோ பகுதியில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. இதற்கான சாட்டிலைட் புகைப்பட ஆதரங்கள் வெளியாகி உள்ளது. மேக்ஸர் டெக்னலாஜி என்ற சாட்டிலைட் தொடர்பான தனியார் நிறுவனம் மூலம் இந்த சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அங்கு தற்போது சீனா நவீன படகுகளை குவித்து உள்ளது. அதேபோல் அங்கு சீனா டென்ட்களை அமைத்து வருகிறது.

    எங்கு

    எங்கு

    கடந்த 29ம் தேதியில் இருந்து சீனா இங்கு படைகளை குவித்து வருகிறது. பாங்காங் திசோ நதிக்கு அருகே இருக்கும் பிங்கர் 5 மற்றும் 6க்கு அருகே படைகளை குவிக்கிறது. அங்கு சீனா போட்களை நிறுத்தி வருகிறது. அதேபோல் புதிய புதிய டென்ட்களை சீனா அமைத்து வருகிறது. பிங்கர் 5 பகுதியில் புதிதாக 3 படகுகளை சீனா கொண்டு வந்துள்ளது.

    வேறு எங்கு

    வேறு எங்கு

    அதேபோல் பிங்கர் 6 பகுதியில் சீனா புதிதாக 10 படகுகளை குவித்து உள்ளது. எல்லா படகுகளில் 10 வீரர்கள் வரை இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அங்கு தற்போது படகுகள் மூலம் 130 வீரர்கள் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்கள் எல்லோரும் எலைட் போர்ஸ் எனப்படும் சக்தி வாய்ந்த படைகளை சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்தியா கட்டுப்பாடு

    இந்தியா கட்டுப்பாடு

    ஆனால் இன்னொரு பக்கம் பிங்கர் 4 பகுதி இன்னும் இந்தியாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. பிங்கர் 8 அருகே சீனாவின் கடற்படையும் அமைந்துள்ளது .சாட்டிலைட் படங்கள் மூலம் இது உறுதியாகி உள்ளது . குளிர்காலத்தில் இந்தியாவை தாக்க வசதியாக சீனா இப்படி செயல்படுகிறது. பனியை பயன்படுத்திக்கொண்டு இந்தியாவை சீனா தாக்கலாம் என்று கூறுகிறார்கள்.

    மூன்று நாட்கள்

    மூன்று நாட்கள்

    இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு இன்னொரு பக்கம் கடந்த 3 நாட்களாக சீனா படைகளை குவித்து வருகிறது. பிங்கர் 5 மற்றும் 6பகுதியில்தான் பதற்றம் நிலவி வருகிறது. இங்கு அதிக குளிரை தாக்கும் டென்ட்களை சீனா அமைத்து வருகிறது. அங்கு மொத்தமாக சீனாவின் 12 டென்ட்கள் உள்ளது. இதற்கு உள்ளே 480 வீரர்கள் வரை இருக்கலாம் என்று கூறுகிறார்கள் .

    எந்த இடம்

    எந்த இடம்

    பாங்காங் திசா பகுதியைதான். பாங்காங் திசா பகுதியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று சீனா துடியாக துடிக்கிறது. பாங்காங் திசோ பகுதியை மொத்தம் 8 பிங்கர்கள் எனப்படும் கட்டுப்பாட்டு பகுதிகளாக பிரித்து இருக்கிறார்கள். இதில் முதல் 4 பகுதியை இந்தியாவும், அடுத்த 4 பகுதியை சீனாவும் கட்டுப்படுத்தி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+