அந்த "423 மீட்டர்".. கால்வானில் சீனா செய்த தந்திரம்.. லீக்கான பகீர் புகைப்படங்கள்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

லடாக்: லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 423 மீட்டர் பகுதிகளை சீனா ஆக்கிரமித்து இருக்கிறது.

லடாக்கில் தற்போது சீனா தொடர்ந்து அத்துமீறல்களை நிகழ்த்தி வருகிறது. அங்கு கடந்த 15 மற்றும் 16 தேதிகளில் சீனாவின் ராணுவம் அத்துமீறி கல்வான் பகுதிக்குள் நுழைந்தது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சென்ற இந்திய வீரர்களையும் தாக்கியது.

சீனாவின் இந்த கொடூரமான தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் எத்தனை பேர் பலியானார்கள் என்ற விவரம் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.

இப்போது என்ன

இப்போது என்ன

இந்த சண்டையை தொடர்ந்து இரண்டு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேஜர், மேஜர் ஜெனரல், கர்னல் என்று பல ரேங்க் கொண்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்தியா இதை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்று நினைத்தது. சீனாவும் கூட இன்னொரு பக்கம் இதை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க நினைப்பதாக கூறியது. ஆனால் எல்லையில் முன்னுக்கு பின் முரணாக சீனா செயல்படுகிறது.

சீனா என்ன செய்கிறது

சீனா என்ன செய்கிறது

ஒரு பக்கம் சீனா பேச்சுவார்த்தை என்று கூறிக்கொண்டு இருந்தாலும், இன்னொரு பக்கம் இந்தியாவிற்கு எதிராக அத்துமீறலை நிகழ்த்தி வருகிறது. பாங்காங் திசோ பகுதியில் இந்தியாவின் நான்கு கட்டுப்பாட்டு பகுதிகளில் இரண்டை சீனா ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. அங்கு ஆக்கிரமிப்பு பணிகளை செய்து வருகிறது. இன்னொரு பக்கம் லடாக் மேலே இருக்கும் டெப்சாங் பகுதியையும் சீனா கைப்பற்றிவிட்டது.

கல்வான் எப்படி

கல்வான் எப்படி

இந்த நிலையில் கல்வான் ப்குதியில் சீனா தொடர்ந்து அத்துமீறி கட்டுமான பணிகளை செய்து வருகிறது. அங்கு 40க்கும் அதிகமான டென்ட்களை சீனா அமைத்துள்ளது. அதேபோல் அதிக அளவில் நவீன ஆயுதங்களை சீனா ராணுவம் களமிறக்கி உள்ளது. நவீன பீரங்கிகளை சீன ராணுவம் அங்கே கொண்டு வந்துள்ளது. மேலும் 12 ஆயிரம் படை வீரர்கள் சீனா சார்பாக அங்கே களமிறக்கப்பட்டு உள்ளனர்.

எவ்வளவு தூரம்

எவ்வளவு தூரம்

அதேபோல் கல்வான் நதியின் வாய் பகுதியில் மட்டும் மொத்தம் 423 மீட்டர் பகுதியை சீனா ஆக்கிரமித்து உள்ளது. இதற்கான தனியார் சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி சீனாவின் பாரம்பரிய எல்லையில் இருந்து 423 கிமீ தூரம் தாண்டி வந்து சீனா டென்ட்களை அமைத்து உள்ளது. கால்வானில் கடந்த 15-16 தேதிகளில் சீனா எங்கு அத்துமீறியதோ அங்கு இருந்து சின்ன இன்ச் கூட சீனா பின்வாங்கவில்லை.

மிக மோசம்

மிக மோசம்

இந்திய ஆவணங்களின் படி இந்த இடம் இந்தியாவிற்கு கீழ் வரும். ஆனால் அதை சீனா ஆக்கிரமித்து உள்ளது. இந்த இடத்தில் இருந்து இந்திய வீரர்களை 500 மீட்டர் தூரத்தில்தான் இந்திய படைகள் இருக்கிறது. இதனால் அங்கு பதற்றம் அதிகரித்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் இது சண்டையாக மாறும் என்கிறீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+