இன்று லடாக்.. நாளை காஷ்மீர்.. எல்லைக்கு "திடீரென" செல்லும் ராஜ்நாத் சிங்.. என்ன நடக்கிறது?
லடாக் எல்லையில் இருக்கும் லே பகுதிக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று செல்ல இருக்கிறார்.
லடாக்: லடாக் எல்லையில் இருக்கும் லே பகுதிக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று செல்ல இருக்கிறார்.
Recommended Video
இந்தியா - சீனா இடையிலான எல்லை பிரச்சனை ஓரளவிற்கு முடிவிற்கு வந்துள்ளது. எல்லையில் பல்வேறு இடங்களில் இருந்து சீனா தனது படைகளை வாபஸ் வாங்கியுள்ளது.
முக்கியமாக லடாக்கில் இருக்கும் கல்வான், டெப்சாங், ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் இருந்தும் சீனா தனது படைகளை வாபஸ் வாங்கியுள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால் இல்லை
எல்லையில் இதன் மூலம் பல்வேறு இடங்களில் இருந்து சீனா தனது படைகளை வாபஸ் பெற்றது. முக்கியமாக பாங்காங் திசோ பகுதியில் பிங்கர் பகுதி இரண்டு மற்றும் மூன்றில் இருந்து சீனா படைகளை வாபஸ் பெற்றது. கல்வான் பகுதியில் இருந்தும் சீனா இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு படைகளை வாபஸ் பெற்றது. இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் தணிந்து வந்தது.

தணிந்த பதற்றம்
இதற்காக அடுத்தடுத்து பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டது. இரண்டாவது முறையாக அஜித் தோவல் தரப்பில் ஒரு பேச்சுவார்த்தை நடந்தது. அதன்பின் லெப்டினன்ட் கர்னல் தரப்பில் இன்னொரு பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில் இன்னும் எல்லையில் பாங்காங் திசோவில் பிங்கர் எண் 4ல் இருந்து சீனா தனது படைகளை வாபஸ் வாங்காமல் இருக்கிறது. அங்கு சீனாவின் படைகள் இப்போதும் உள்ளது.

சீனாவின் படைகள்
அங்கு சீனாவின் படைகள் தொடர்ந்து முகாமிட்டு வரும் நிலையில்தான் லடாக் எல்லையில் இருக்கும் லே பகுதிக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று செல்ல இருக்கிறார். எல்லையில் இருக்கும் நிலவரத்தை அவரை சோதனை செய்ய இருக்கிறார். ராஜ்நாத் சிங் உடன் முப்படை தளபதி பிபின் ராவத் உடன் செல்கிறார்.

வேறு யார்
அதேபோல் ராணுவ தளபதி நரவானே உடன் செல்கிறார். எல்லையில் நிலவரம் எப்படி இருக்கிறது. சீனா தனது படைகளை வாபஸ் வாங்கிவிட்டதா என்று ஆலோசனைகளை மேற்கொள்ள செல்கிறார்கள். எல்லையில் நிலைமை சரியாகிவிட்டதா என்பதை சோதனை செய்ய இவர்கள் எல்லைக்கு செல்கிறார்கள். இன்று லடாக் செல்லும் ராஜ்நாத் சிங் நாளை காஷ்மீர் செல்ல இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications