வெறும் 1 கிமீ தூரம்தான்.. கல்வானில் சீனாவின் புதிய சதித்திட்டம்.. காட்டிக்கொடுத்த சாட்டிலைட் போட்டோ
லடாக்: லடாக் எல்லையில் இருக்கும் கல்வான் பகுதியில் சீனா புதிய சதித்திட்டங்களை அமைத்து தீட்டி வருவது அம்பலம் ஆகி உள்ளது.
இந்தியா - சீனா இடையே லடாக்கில் கடந்த ஒரு மாதமாக நடந்த சண்டை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த சண்டை காரணமாக எப்போது வேண்டுமானாலும் இரண்டு நாட்டு போர் வெடிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
மூன்று முன் கல்வான் பகுதியில் இரண்டு நாட்டு ராணுவத்திற்கு எதிராக சண்டை நடந்தது. அங்கு 3 நாட்கள் முன் நடந்த சண்டையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்ன செய்தனர்
இந்த நிலையில் லடாக் எல்லையில் இருக்கும் கல்வான் பகுதியில் சீனா புதிய சதித்திட்டங்களை அமைத்து தீட்டி வருவது அம்பலம் ஆகி உள்ளது. அதன்படி கல்வான் பகுதியில் சீனா புதிய கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் கல்வான் நதி மூலம் இந்தியாவிற்கு வரும் நீரை தடுக்கும் வகையில் அங்கு சீனா கல்வான் நதியை தடுத்து வருகிறது. மொத்தமாக நதியில் பாறைகள், மண் போட்டு மூடி கட்டுமான பணிகளை செய்து வருகிறது.
|
எங்கே நடக்கிறது
கல்வான் பகுதியில் கடந்த 15-16 தேதிகளில் இரண்டு நாட்டு ராணுவத்திற்கும் இடையே சண்டை நடந்தது. இந்த சண்டை நடந்த பகுதி கல்வான் கட்டுப்பாட்டு பகுதி எண் 14 ஆகும். இந்த இடத்தில் இருந்து வெறும் 1 கிமீ தூரத்தில்தான் புதிய கட்டுமான பணிகளை சீனா செய்து வருகிறது. இங்குதான் சீனா நதியை மறைத்து கட்டுமான பணிகளை செய்கிறது. அதேபோல் நதிக்கு இரண்டுக்கு புறமும் கட்டுமான பணிகள் நடக்கிறது.
|
இரண்டு பக்கமும் கட்டுமானம்
நதியின் இரண்டு பக்கமும் சுரங்கங்களை சீனா அமைத்து வருகிறது. அதுமட்டுமின்றி, அங்கு பெரிய பெரிய முகாம்களை அமித்துள்ளது. இதெல்லாம் அப்படியே சாட்டிலைட் புகைப்படங்களில் பதிவாகி உள்ளது. அதோடு அங்கு சீனாவின் ராணுவ வீரர்கள் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அதற்கு ஏற்ற பணியாளர்களும் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

ஆயுதங்கள் வாகனங்கள்
அதேபோல் சீனாவின் நவீன் ஆயுதங்கள், போர் கருவிகள், துப்பாக்கிகள் இங்கே கொண்டு வரப்பட்டுள்ளது. ஆயுதங்களை ஏந்தி வரும் லாரி போன்ற வாகனங்கள் இங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ளே நிறைய ஆயுதங்கள் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. அதேபோல் அங்கு கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் விதமாக புல்டோசர்கள் நிறைய களமிறக்கப்பட்டுள்ளது.

அமைதி திரும்புமா?
இந்த அனைத்து பணிகளையும் சீனா அத்துமீறி செய்து வருகிறது. ஒரு பக்கம் எங்களுக்கு அமைதி வேண்டும், பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று சீனா கோரிக்கை வைக்கிறது. இன்னொரு பக்கம் இப்படி வெளிப்படையாக கட்டுமான பணிகளை செய்கிறது. அதோடு எல்லையில் படைகளையும் குவித்து வருகிறது. இதனால் அங்கு அமைதி திரும்புமா என்று கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video

இந்தியா எப்படி
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் அங்கு படைகளை குவித்து வருகிறது.கல்வான் பகுதியில் மற்ற சில இடங்களில் இந்தியாவும் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதெல்லாம் இந்தியாவிற்கு கீழ் வரும் பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவும் பாதுகாப்பு கருதி அங்கு நவீன ஆயுதங்களை களமிறக்கி வருகிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications