20 இந்திய வீரர்களின் வீர மரணம்.. களமிறங்கிய அமெரிக்கா.. இந்தியா - சீனா சண்டை பற்றி அதிரடி கருத்து!
லடாக்: இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் நடந்து வரும் சண்டை குறித்து அமெரிக்கா முதல்முறையாக கருத்து தெரிவித்து உள்ளது. நேற்று முதல் நாள் இரவு நடந்த சண்டை குறித்து அமெரிக்கா மௌனம் கலைத்து உள்ளது.
Recommended Video
இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. நேற்று முதல் நாள் இரவு லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் நடந்த சண்டையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
அதேபோல் சீனாவை சேர்ந்த ராணுவ வீரர்கள் 43 பேர் இந்த சண்டையில் கொல்லப்பட்டனர். இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. அங்கு போர் மேகங்கள் சூழ்ந்துள்ளது.

அமெரிக்கா ஆர்வம்
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள மோதலில் அமெரிக்கா தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. முக்கியமாக இதில் டிரம்ப் அதிக ஆர்வம் காட்டுகிறார். இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் நடக்கும் பிரச்னையை தீர்த்து வைப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். அதாவது எல்லையில் தற்போது நடந்து வரும் பிரச்னையை சரி செய்ய தயாராக இருக்கிறோம்.

என்ன சமாதானம்
இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டால் அவர்களிடையே பேசி, சமாதானம் செய்து, மத்தியசம் பேச தயாராக இருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் இந்த சமாதான பேச்சை இந்தியா மறுத்துவிட்டது. அதேபோல் சீனாவும் அமெரிக்காவின் சமாதான பேச்சுவார்த்தை அழைப்பிற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.

அமெரிக்கா கருத்து
இந்த நிலையில் இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் நடந்து வரும் சண்டை குறித்து அமெரிக்கா முதல்முறையாக கருத்து தெரிவித்து உள்ளது. நேற்று முதல் நாள் இரவு நடந்த சண்டை குறித்து அமெரிக்கா மௌனம் கலைத்து உள்ளது. அமெரிக்காவின் ஸ்டேட் டிபார்ட்மென்ட் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், எல்லையில் நடக்கும் சண்டையை நாங்கள் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

அதிக கவனம்
இந்தியா சீனா இடையிலான மோதலில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இந்தியாவை சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறித்த செய்தி கேட்டறிந்தோம். இதற்காக வருந்துகிறோம். அவர்களின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த சண்டையை எப்படியாவது அமைதியாக இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்.

அமைதி முக்கியம்
இரண்டு நாடுகளும் இந்த பிரச்னையை தீர்க்க முடிவு செய்துள்ளது. விரைவில் அமைதியாக படைகளை வாபஸ் வாங்கி, இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்பும் ஜூன் 2ம் தேதிதான் போனில் பேசினார்கள். இந்தியா - சீனா மோதல் குறித்து இவர்கள் இருவரும் பேசினார்கள். அதில் இருந்து லடாக் எல்லை பிரச்சனையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம், என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications