நிலைமை மோசமாக உள்ளது.. இந்தியாவிடம் பேசி வருகிறோம்.. சீனா பற்றி டிரம்ப் பகீர் பேச்சு.. என்ன பின்னணி?

லடாக்கில் தற்போது நிலைமை மிக மோசமாக இருக்கிறது, இந்தியாவிடம் இது தொடர்பாக பேசி வருகிறோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

லடாக்: லடாக்கில் தற்போது நிலைமை மிக மோசமாக இருக்கிறது, இந்தியாவிடம் இது தொடர்பாக பேசி வருகிறோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த 15 மற்றும் 16ம் தேதிகளில் லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில் இரண்டு நாட்டு ராணுவத்திற்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இதனால் இந்தியா சீனா இடையே லடாக்கில் சண்டை முற்றி வருகிறது. லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. இன்னொரு பக்கம் இந்தியாவும் படைகளை குவித்து வருகிறது.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இதுகுறித்து தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். அதில், நாங்கள் இரண்டு நாடுகளிடமும் பேசி வருகிறோம். இந்தியா - சீனாவிடம் பேசி எப்படியாவது பிரச்னையை தீர்க்க முயன்று வருகிறோம். இரண்டு நாடுகளும் அமைதியாக பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் நோக்கம். லடாக்கில் நிலவும் மோசமான நிலையை இரண்டு நாடுகளும் முடிந்த அளவு சுமுகமாக தீர்க்க வேண்டும்.

நிலைமை மோசம்

நிலைமை மோசம்

தற்போது நிலைமை மிகவும் கடினமாக, மோசமாக இருக்கிறது. நாங்கள் இந்தியாவிடம் பேசி வருகிறோம். அதேபோல் நாங்கள் இன்னொரு பக்கம் சீனாவிடமும் பேசி வருகிறோம். அவர்களுக்கு இடையே மிகப்பெரிய பிரச்சனை இருக்கிறது. இதை உடனே தீர்க்க வேண்டியது கடமையாக உள்ளது.

பேச்சுவார்த்தை எப்படி

பேச்சுவார்த்தை எப்படி

இரண்டு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை பெரிதாக வெடிக்கும் நிலையில் இருக்கிறது. என்ன நடக்கிறது என்று பார்க்கக் போகிறோம். நாங்கள் அவர்களுக்கு உதவி செய்வோம். அவர்களிடையே அமைதியை கொண்டு வர முயற்சி செய்வோம், என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டு இருக்கிறார். இந்தியா - சீனா சண்டையில் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு வர தயார் இல்லை என்று கூறப்பட்ட நிலையில் டிரம்ப் இப்படி பேசி இருக்கிறார்.

திட்டம்

திட்டம்

முன்னதாக இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் நடக்கும் பிரச்னையை தீர்த்து வைப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். அதாவது எல்லையில் தற்போது நடந்து வரும் பிரச்னையை சரி செய்ய தயாராக இருக்கிறோம். இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டால் அவர்களிடையே பேசி, சமாதானம் செய்து, மத்தியசம் பேச தாயாராக இருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.

ஒத்துழைக்கவில்லை

ஒத்துழைக்கவில்லை

ஆனால் இதற்கு இரண்டு நாடுகளும் ஒத்துழைக்கவில்லை.இது எங்கள் நாட்டு பிரச்சனை. இதை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று இந்தியா உறுதியாக அமெரிக்காவிடம் கூறிவிட்டது. அதேபோல் இன்னொரு பக்கம் சீனாவும் அமெரிக்காவின் மத்தியச கோரிக்கையை மறுத்து விட்டது. இந்த நிலையில் அமெரிக்காவும் இதில் இருந்து விலகி இருந்தது.

Recommended Video

    India- china குறித்து கருத்து கூறிய Trump.. பின்னணி என்ன?
    உடனே தீர்க்க வேண்டும்

    உடனே தீர்க்க வேண்டும்

    அதாவது அவர்கள் இருவரும் இந்த பிரச்னையை பேசி தீர்க்க வேண்டும். இரண்டு நாட்டு பிரச்னையை அவர்கள் சுமுகமாக தீர்க்க வேண்டும் . இவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணத்தில் நாங்கள் இல்லை. மத்தியசம் பேசும் எண்ணம் எதுவும் வெள்ளை மாளிகைக்கு இல்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் டிரம்ப் மீண்டும் இதில் தலையை நீட்ட முடிவு செய்து உள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+