மோடி அரசு மீது தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா மிகக் கடும் காட்டம்! பதவி விலகப் போவதாக எச்ச்சரிக்கை!!
டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதியாக வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்தை நியமிக்கும் விவகாரத்தில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். அத்துடன் நீதித்துறையின் சுதந்திரம் பறிக்கப்பட்டால் ஒரு வினாடி கூட தலைமை நீதிபதியாக நீடிக்க போவதில்லை என்றும் ஆர்.எம்.லோதா எச்சரித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாக மே முதல் வாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான நீதிபதிகள் நியமன பரிந்துரைக் குழுவானது மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சுப்பிரமணியம், நாரிமன், ஒடிஷா மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல், அருண் மிஷ்ரா ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்தது. நீதிபதிகள் நியமன பரிந்துரைக் குழுவில் நீதிபதிகள் ஹெச்.எல். தத்து, ஏ.கே. பட்நாயக், பல்பீர்சிங் சவுகான், தீரத்சிங் தாக்கூர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இதைத் தொடர்ந்து இந்திய நீதிபதிகள் நியமன நடைமுறைகளின் ஒரு அம்சமாக, மத்திய உளவுத்துறையும் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகள் குறித்து ஒரு விசாரணை நடத்தி மே 15-ந் தேதியன்று அனைவருக்கும் நற்சான்றிதழை நீதிபதிகள் நியமன பரிந்துரைக் குழுவிடம் கொடுத்தது. இந்த நிலையில்தான் தேர்தல் முடிவுகள் வெளியாகி நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்றது.

மோடி அரசு பதவியேற்ற பின்..
நரேந்திர மோடி அரசு பதவியேற்ற நிலையில் புதிய நீதிபதிகள் நியமனம் குறித்த பரிந்துரையை நீதிபதிகள் நியமன பரிந்துரைக் குழு முறைப்படி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும் முன்பே நீதிபதிகளில் ஒருவராக பரிந்துரைக்கப்பட்ட கோபால் சுப்பிரமணியம் தொடர்பான சில விஷயங்கள் ஊடகங்களில் கசியவிடப்படுகிறது.

நீரா ராடியாவுடன் தொடர்பு
அதில் ஸ்பெக்ட்ரம் வழக்கில் அடிபட்ட நீரா ராடியாவுடன் தொடர்புடையவர் கோபால் சுப்பிரமணியம் என்ற மேம்பாக்கான விஷயம் பெரிதுபடுத்தப்பட்டது.

பேசியது நீச்சல் குள விவகாரம்..
ஆனால் தனது உடல் எடையைக் குறைக்க டாடா குழுமத்துக்கு சொந்தமான தாஜ் ஹோட்டல் நீச்சல் குள உறுப்பினராவது தொடர்பாகவே நீரா ராடியாவும் கோபால் சுப்பிரமணியமும் பேசினார் என்ற யதார்த்த உண்மை முன்னிலைப்படுத்தப்படவில்லை.

சொராபுதீன் வழக்கு
அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வலது கரமான அமித் ஷா தொடர்புடைய சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கு விவகாரத்தில் குஜராத் அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்துக்கு உதவியாக இருந்தவர் கோபால்சுப்பிரமணியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோபால்சுப்பிரமணியம் சீற்றம்
இதனைத் தொடர்ந்தே தம்மை மத்திய அரசு பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது என்றும் தம்மை நீதிபதியாக நியமிக்க வேண்டாம் என்று பரிந்துரைக் குழுவுக்கு கோபால் சுப்பிரமணியம் கடிதம் எழுத பிரச்சனை வெடித்தது. குறிப்பாக சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில் தான் உச்சநீதிமன்றத்துக்கு உதவி வருவதுதான் தனது நியமனத்தை மத்திய அரசு எதிர்ப்பதற்குக் காரணம் என்றும் கோபால் சுப்பிரமணியம் சுட்டிக்காட்டியிருந்தார். பின்னர் மத்திய அரசும் கோபால் சுப்பிரமணியம் பெயரை பரிந்துரைப் பட்டியலில் நீக்கியது.

தலைமை நீதிபதி லோதா கொந்தளிப்பு
இந்த நிலையில்தான் உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ்.சவுகான் பணி ஓய்வுவையொட்டி நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா, இந்த விவகாரத்தை முன்வைத்து மத்திய அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேச பிரச்சனை உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா நேற்று பேசியதாவது:
நீதித்துறையின் சுதந்திரத்தில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளப்பட மாட்டாது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரைப் பட்டியலில் இருந்த கோபால் சுப்ரமணியத்தின் பெயரை நீக்கியது, மத்திய அரசின் தன்னிச்சையான முடிவு. இப்படி கோபால் சுப்பிரமணியத்தின் பெயரை நீக்குகிற விஷயம் எனது கவனத்திற்குக் கொண்டுவரப்படாமலே எடுக்கப்பட்ட முடிவு. நான் வெளிநாடு சென்றிருந்த நிலையில் இந்த விவகாரத்தை கோபால் சுப்ரமணியம் வெளிப்படையாக அறிவித்தது ஏமாற்றமளித்தது.

பதவியில் நீடிக்க மாட்டேன்..
கடந்த சில வாரங்களாக நடைபெறும் சம்பவங்கள், நீதித்துறையின் சுதந்திரம், நேர்மை, புகழ் ஆகியவற்றை இந்த அரசு மதித்துச் செயல்படுகிறதா? என்ற சந்தேகத்தை என் மனதில் ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த அணுகுமுறை மாறும் என்று தான் எதிர்பார்க்கவில்லை.
என்னை கலந்தாலோசிக்காமலும், என்னுடைய ஒப்புதலை பெறாமலும் கோபால் சுப்ரமணித்தை மத்திய அரசு புறக்கணித்துள்ளது. இப்படி நீதித்துறையின் சுதந்திரம் பறிக்கப்பட்டால் ஒரு வினாடி கூட தலைமை நீதிபதியாக நான் நீடிக்க போவதில்லை.
இவ்வாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா பேசியுள்ளார்.

மத்திய அரசுக்கு நெருக்கடி
நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா வெளிப்படையாக விமர்சனம் செய்திருப்பது மத்திய அரசுக்கு மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications