மோடிக்காக காத்திருக்கும் ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கான ஒப்புதல்!!
டெல்லி: நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற உடன் ரூ20 லட்சம் கோடி மதிப்பிலான தேங்கிக் கிடக்கும் 430 திட்டங்களுக்கு ஒப்புதல் தர வேண்டிய முதன்மைப் பணி காத்திருக்கிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இறுதிக் காலத்தில் பல லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுக்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. இது நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான தேக்க நிலையை உருவாக்கி இருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த திட்டங்களுக்கான கண்காணிப்புக் குழுத் தலைவரான அனில் ஸ்வரூப், ஐக்கிய முன்னணி அரசின் இறுதிக் காலத்தில் நிலக்கரி விநியோகம் மற்றும் மின் திட்டங்கள் போன்றவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை.
கடந்த 9 மாத காலத்தில் 150 திட்டங்களுக்கு அதாவது ரூ5 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மட்டுமே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒப்புதல் அளித்திருந்தது. தற்போது 430 திட்டங்கள் அதாவது ரூ20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மோடி அரசு முன்னுரிமை கொடுத்து ஒப்புதல் கொடுத்தால் நாட்டின் பொருளாதார நிலைமையில் நல்ல தாக்கம் ஏற்படும் என்றார்.
ஏற்கெனவே முக்கிய நிதித்துறை சார்ந்த அமைச்சகங்களின் செயலர்களுடன் நரேந்திர மோடி தமது ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications