மேற்கு வங்கம் நோக்கி நகரும் ஃபனி.. கடும் வேகம்.. பிரச்சாரத்தை ரத்து செய்த மமதா.. அவசர ஆலோசனை!
மேற்கு வங்கம் நோக்கி ஃபனி புயல் நகர்ந்து வருவதால் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தனது அனைத்து பிரச்சார பயணங்களையும் ரத்து செய்துவிட்டு தற்போது அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
கொல்கத்தா: மேற்கு வங்கம் நோக்கி ஃபனி புயல் நகர்ந்து வருவதால் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தனது அனைத்து பிரச்சார பயணங்களையும் ரத்து செய்துவிட்டு தற்போது அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
மிக மோசமான ஃபனி புயல் தற்போது கரையை கடந்து வருகிறது. ஒடிசா மாநிலம் கோபால்புர் மற்றும் சந்த்பாலி ஆகிய பகுதிகளுக்கு இடையே இந்த புயல் கரையைக் கடக்க தொடங்கி உள்ளது. காலை 8 மணிக்கு இந்த புயல் கரையை கடக்க தொடங்கியது. காலை 11 மணிக்கு முழுமையாக இந்த புயல் கரையை கடக்கும்.

இந்த நிலையில் இந்த புயல் தற்போது மேற்கு வங்கம் நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயல் மேற்கு வங்கத்தில் பல மாவட்டங்களை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கிருந்து ஏற்கனவே பல மக்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.
மேற்கு வங்கம் நோக்கி புயல் நகர்ந்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அம்மாநில அரசு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. மேற்கு வங்கத்தை தாக்கிய பின் இந்த புயல் வங்கதேசம் நோக்கி நகர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதனால் அந்நாட்டு அரசும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் இன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது அனைத்து பிரச்சார பயணங்களையும் ரத்து செய்தார். தற்போது புயல் தொடர்பாக அங்கு அதிகாரிகளுடன் அவர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த அனைத்து பிரச்சார கூட்டங்களும் தற்போது ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. மக்களை வெளியேற்றுவது குறித்து தற்போது ஆலோசனை நடந்து வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications