Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இடியாக விழுந்த செய்தி.. 8 ஆண்டு கோமாவில் இருந்த ராணுவ வீரர் கரன்பீர் வீர மரணம்! கலங்கும் குடும்பம்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்து 8 ஆண்டுகள் கோமா நிலையில் இருந்த ராணுவ வீரர் கர்னல் கரன்பீர் சிங் நாட் வீர மரணம் அடைந்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் உள்ள ஹாஜி நகா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்திய ராணுவம் ஒரு ஆபரேஷனை நடத்தியது. அந்த மாதம் முழுவதும் இந்திய ராணுவம் - பயங்கரவாதிகளுடன் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டு இருந்தது. இந்த தாக்குதலுக்கு 5 நாட்கள் முன்பாக நவம்பர் 17 ஆம் தேதி கர்னல் சந்தோஷ் மகாதிக் என்பவர் இந்த மிகப்பெரிய பயங்கரவாத தடுப்பு ஆபரேசனை தொடங்கினார்.

Colonel Karanbir Singh Nath, who died on sunday was in a coma for 8 years

குப்வாராவின் கலரூஸ் என்ற பகுதியில் தொடங்கிய ஆபரேசன் சுற்று வட்டார பகுதிகளிலும் தீவிரமாக நடைபெற்றது. அப்போது பயங்கரவாதிகளுடனான சண்டையில் கர்னல் சந்தோஷ் மகாதின் மார்பில் குண்டு பாய்ந்து வீர மரணம் அடைந்தார். அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற சண்டையின்போது கூடாரத்தின் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் துணை கர்னல் கரன்பீர் சிங் நாத் படுகாயமடைந்தார். குறிப்பாக அவரது முகத்தில் குண்டு பாய்ந்தது. அந்த சமயத்தின் சக ராணுவ வீரர்கள் மூன்று பேரின் உயிரை அவர் காப்பாற்றினார்.

இதனை அடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கர்னல் கரன்பீரின் குடும்பம் படும் துயரம் குறித்து அவரது உயர் அதிகாரி கர்னல் அனில் அலக் கடந்த 2018 ஆம் ஆண்டு நெஞ்சம் உருக ஒரு பதிவை எழுதி இருந்தார். படுகாயமடைந்த கரன்பீர் விமானம் மூலம் ஸ்ரீநகருக்கும் அங்கிருந்து டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் படுத்த படுக்கையாகவே இருந்தார். அவர் விழிப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியாமல் இருந்தது.

கர்னல் கரன்பீர் எப்போது கண் விழிப்பார் என காத்திருந்த குடும்பத்தினருக்கு, அவர் கோமா நிலைக்கு சென்று விட்டார் என்ற செய்தி இடியாக வந்து விழுந்தது. எப்படியாவது தனது கணவர் விழித்து வருவார் என்று அவரது மனைவியும், தந்தையும் மீண்டும் வெளியில் செல்லலாம் என்ற கனவுடன் அவரது குழந்தைகளும் 8 ஆண்டுகளாக காத்திருந்தனர். இந்த நிலையில் அவர்களின் அந்த நம்பிக்கையையும் தகர்க்கும் வகையில் கடந்த ஞாயிறு அன்று கர்னல் கரன்பீர் சிங் நாக் காலமானார்.

கர்னல் கரன்பீர் சிங் நாக் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மறைந்த கர்னல் கரன்பீர் சுமார் 20 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து இருக்கிறார். சென்னை ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற இவர், கடந்த 1998 ஆம் ஆண்டு ராணுவத்தில் இணைந்தார். ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் 14 ஆண்டுகள் பணிபுரிந்த இவர், அதன் பின்னர் பிராந்திய ராணுவத்தில் இணைந்து நாட்டுக்காக சேவை புரிந்தார். இவரது சேவையை பாராட்டு சேனா விருது வழங்கப்பட்டது. இப்படி நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்த வீரரின் மரணம் அனைவரையும் கலங்க வைத்து இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+