ஆட்சியில் இருப்பது பாஜகதான்.. ஆனால் இடைத்தேர்தலில் கொடி நாட்டும் காங்கிரஸ்! உத்தரகாண்ட்டில் சம்பவம்
டேராடூன்: 7 மாநிலங்களில் 13 சட்டசபை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் 11 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2022ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 46 இடங்களை கைப்பற்றி ஆட்சியை அமைத்தது. அதேபோல 20 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் எதிர்க்கட்சியாக அமர்ந்தது. இவ்விரு கட்சிகள் தவிர பகுஜன் சமாஜ் கட்சிக்கு 1 தொகுதியும், சுயேட்சை வேட்பாளர்கள் 2 தொகுதிகளையும் கைப்பற்றியிருந்தனர். இந்நிலையில் கடந்த 10ம் தேதி பத்ரிநாத் மற்றும் மங்களூரு என இரண்டு தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.

பத்ரிநாத்: இந்த தொகுதியில் கடந்த 2002ம் ஆண்டிலிருந்து தேர்தல் நடைபெற்று வருகிறது. தொகுதியின் தன்மையை பொறுத்தவரை, ஒருமுறை பாஜகவும், அடுத்த முறை காங்கிரசுக்கும் மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். 2002ம் ஆண்டு காங்கிரஸ் இந்த தொகுதியில் வென்றது. இதனை தொடர்ந்து 2007ல் பாஜகவும், 2012ல் காங்கிரசும், 2017ல் பாஜகவும், 2022ல் காங்கிரசும் இந்த தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறது.
இப்படி இருக்கையில், 2012 மற்றும் 2022ல் இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ராஜேந்திர சிங் பந்தாரி, திடீரென கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார். இதனால் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 10ம் தேதி நடந்த தேர்தலில் 49.80 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.
மங்களூர்: இந்த தொகுதியிலும் 2002லிருந்து தேர்தல் நடைபெற்று வருகிறது. பெரும்பான்மையான தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சிதான் வென்றிருக்கிறது. நடுவில் இரண்டு முறை மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்த சார்வாட் கரீம் அன்சாரி அடிப்படையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். ஆனால், 2012 தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதன் பின்னர் 2022 தேர்தலிலும் பகுஜன் சமாஜ் சார்பில் வெற்றி பெற்றார்.
ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் தேதி அவர் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து இந்த தொகுதிக்கு கடந்த 10ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 68.24 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
இன்று இரண்டு தொகுதியிலும் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பிற்பகல் நிலவரப்படி இரண்டு தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள்தான் முன்னிலையில் இருக்கின்றனர். தாங்கள் ஆளும் மாநிலத்தில் இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் முன்னிலை வகிப்பது பாஜகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications