ராகுல் காந்தி விமானத்தில் திடீர் கோளாறு.... கொல்வதற்கு சதி நடப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்ற விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. அவரை கொல்வதற்கு சதி நடப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு சென்ற விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. ஆனால் அவரைக் கொல்வதற்கு நடந்த சதி என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
கர்நாடகாவில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து ஹூப்ளிக்கு பயணம் மேற்கொண்டார்.

விமானம் தரையிறங்கும்போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஒரு பக்கமாக சாய்ந்ததாகவும், சில சப்தம் வந்ததாகவும், ராகுல் காந்தியின் பாதுகாவலர்கள் ஹூப்ளி போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
மேலும், டெல்லியில் இருந்து வந்த இரண்டு மணி நேர பயணத்தின்போதும், விமானத்தில் சில கோளாறுகள் இருந்ததாகவும், வழக்கத்துக்கு மாறாக இந்தப் பயணம் அமைந்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியைக் கொல்வதற்கு சதி நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், பாஜக அதை மறுத்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, ராகுல் காந்தியிடம் பிரதமர் நரேந்திர மோடி அலுவலகம் விசாரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறப்பு பாதுகாப்பு உள்ள ராகுல் சென்ற தனி விமானத்தின் பராமரிப்பு குறித்தும், விமானத்தில் ஏற்பட்ட கோளாறுகள் குறித்த விசாரணைக்கு விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் சட்டசபை நடக்க உள்ள நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது, அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications