Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா சோனியா! காங்கிரஸ் அளித்த விளக்கம்! உற்று பார்க்கும் தொண்டர்கள்

சோனியா காந்தியின் பேச்சு குறித்து காங்கிரஸ் விளக்கமளித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் நேற்று பேசிய சோனியா காந்தி, பாரத் ஜோடோ ஒற்றுமை யாத்திரையுடன் இன்னிங்ஸ் முடியும் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார். இதனால் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் என்று தகவல்கள் பரவிய நிலையில், இது குறித்து காங்கிரஸ் விளக்கமளித்துள்ளது.

ராகுல் காந்தி கடந்த செப் மாதம் பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்கினார். நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைப்பயணம் செய்து பொதுமக்களைச் சந்தித்தார்.

காங்கிரஸ் கட்சி கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்தது. இந்தச் சூழலில் ராகுல் காந்தியின் பயணம் தொண்டர்களுக்குப் புத்துணர்ச்சி ஊட்டுவதாக அமைந்தது.

 காங்கிரஸ் காரிய கமிட்டி

காங்கிரஸ் காரிய கமிட்டி

இந்த பயணத்தில் அவர் பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்தார். ராகுல் காந்தியின் இந்த பயணத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்ததாக அக்கட்சியின் தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே இப்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85ஆவது அகில இந்திய மாநாடு நடைபெறுகிறது. கடந்த 24ஆம் தேதி இந்த மாநாடு தொடங்கிய நிலையில், இதில் மூத்த தலைவர்கள், காரிய கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 அரசியலில் இருந்து ஓய்வு?

அரசியலில் இருந்து ஓய்வு?

இதற்கிடையே நேற்று இந்த கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, 2004 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் நாங்கள் உரியத் தலைமையுடன் வெற்றிபெற்றோம் என்றும் மன்மோகன் சிங் ஆட்சி முழு திருப்திகரமாக இருந்தது என்றும் தெரிவித்தார். மேலும், காங்கிரஸுக்கு பாரத் ஜோடோ ஒற்றுமை யாத்திரை திருப்புமுனையாக அமைந்தது என்றும் இத்துடன் தனது இன்னிங்ஸ் முடியும் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார்.

 காங்கிரஸ் விளக்கம்

காங்கிரஸ் விளக்கம்

சோனியா காந்தி அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போகிறார் என்றும் அதையே இவரது பேச்சு உணர்த்துவதாகவும் தகவல்கள் பரவினர். சோனியா காந்தியின் இந்த பேச்சு பல காங்கிரஸ் தொண்டர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே இது குறித்து அக்கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான அல்கா லம்பா விளக்கமளித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை என்று அவர் தெரிவித்தார்.

 ஆமோதித்த சோனியா காந்தி

ஆமோதித்த சோனியா காந்தி

சத்தீஸ்கரில் காரியா கமிட்டி கூட்டத்தில் பேசிய அவர், "சோனியா காந்தி அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை. இதை அவரே தெளிவுபடுத்திவிட்டார். தொடர்ந்து வழிகாட்டும் சக்தியாக இருப்பேன் என்றும் சோனியா காந்தி குறிப்பிட்டார்" என்று அவர் தெரிவித்தார். அவர் இதைக் கூறும் போது சோனியா காந்தியும் அங்கு இருந்தார். அல்கா லம்பா இதைச் சொல்லும் போது, அதை ஆமோதிக்கும் வகையில் சிரித்துக் கொண்டே தலையசைத்தவாறு கேட்டார். இதன் மூலம் சோனியா காந்தி அரசியலில் இருந்து ஓய்வுபெறப் போவதாகப் பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 திருப்புமுனை

திருப்புமுனை

முன்னதாக நேற்று இந்தக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, "பாரத் ஜோடோ யாத்ராவுடன் எனது இன்னிங்ஸ் முடியும் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. யாத்திரை ஒரு திருப்புமுனையாக இருந்தது. இந்திய மக்கள் நல்லிணக்கம், சகிப்புத்தன்மை மற்றும் சமத்துவத்தைப் பெரிதும் விரும்புகிறார்கள் என்பதை இது நிரூபித்துள்ளது. இது கட்சிக்கும் மக்களுக்கும் இடையேயான உரையாடலை மீண்டும் தொடங்கி வைத்துள்ளது. காங்கிரஸ் மக்களுடன் நிற்கிறது.. அவர்களுக்காகப் போராடத் தயாராக உள்ளது என்பதை இது மக்களுக்குக் காட்டியுள்ளது.

 மீண்டும் தேர்தலில் களமிறங்குவாரா

மீண்டும் தேர்தலில் களமிறங்குவாரா

இந்த யாத்திரைக்காகக் கடுமையாக உழைத்த அனைத்து கட்சித் தொண்டர்களையும் நான் வாழ்த்துகிறேன்... குறிப்பாக யாத்திரையை முன்னின்று நடத்திய ராகுல் காந்திக்கு நான் நன்றி கூறுகிறேன்" என்று கூறியிருந்தார். அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை என்ற போதிலும், அடுத்து வரும் மக்களவை தேர்தலிலும் உபி-இன் ரேபரேலியில் இருந்து மீண்டும் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடுவாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ரேபரேலியில் அவரது மகள் பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது.

காங்கிரஸ்

காங்கிரஸ்

அடுத்தடுத்து இரு மக்களவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மிக மோசமாக தோல்வியடைந்துள்ள நிலையில், வலுவான கூட்டணி அமைத்துத் தேர்தலை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் அக்கட்சியின் தலைவர் கார்கே இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக அரசுக்கு எதிராக இருக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே அணியில் கொண்டு வந்து, வலுவான கூட்டணியை உருவாக்குவதே இப்போது காங்கிரஸ் கட்சியின் திட்டமாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+