மசூதி குறித்த ‘சாமி’யின் சர்ச்சைப் பேச்சு... ராஜ்யசபாவில் காங்கிரஸ் ரகளை!
டெல்லி: மசூதிகளை இடிக்க வேண்டும் என்ற சுப்பிரமணிய சுவாமியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
பாரதீய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமி சமீபத்தில் அசாம் மாநில பல்கலைக்கழத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர், ‘மசூதிகள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களை இடிக்கவேண்டும்' எனப் பேசியது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.

சுப்பிரமணியன் சுவாமியின் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இப்பிரச்சினை மாநிலங்களவையிலும் எதிரொலித்தது.
மாநிலங்களவை தொடங்கியதும், புதியதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பிரமோத் தெவாரி, இப்பிரச்சனையை எழுப்பினார். ‘மதசார்பின்மை இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம். எனவே, சுப்பிரமணியன் சாமியின் சமீபத்திய கருத்து தொடர்பாக அவருக்கு எதிராக குற்றம் பதிவு செய்ய முடியும்' என அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து துணை சபாநாயகர் குரியன், ‘இப்பிரச்சனையை பூஜ்ஜிய நேரத்தில் எழுப்ப நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது, இது அனுமதிக்கப்படும். அப்போது நீங்கள் இதுதொடர்பாக பேசலாம்' என்றார்.
இதனால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அவையில் கடும் அமளியிலீடுபட்டனர். அவையின் மையப் பகுதிக்கு வந்த அவர்கள், பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பேசுகையில், ‘இப்பிரச்சனையை பூஜ்ஜிய நேரத்தில் தான் எழுப்ப முடியும்' எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களை இருக்கைக்கு செல்லுமாறு துணை சபாநாயகர் குரியன் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், அதனை ஏற்க மறுத்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து குரியன், இது ஒழுக்கமற்றது, இதுபோன்று நடந்து கொள்ளாதீர்கள் என்று கூறி அவையை 10 நிமிடங்கள் ஒத்திவைத்தார்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications