மனுத்தாக்கல் நேரடி ஒளிபரப்பு: மோடி மீது வழக்குப் பதிவு செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்
டெல்லி: மோடியின் வேட்புமனுத் தாக்கலை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பியது தேர்தல் விதிமீறல், எனவே அது தொடர்பாக பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடி, நேற்று வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். தனது தொண்டர்களுடன் வாகனத்தில் ஊர்வலமாக வந்து வேட்புமனுத் தாக்கல் செய்த மோடியை சில தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பின.

இச்செயல் அப்பட்டமான தேர்தல் விதிமீறல் என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளரும், மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
மேலும், லோக்சபா தேர்தலில் 6 வது கட்டமான நேற்று தேர்தல் நடைபெற்ற 117 தொகுதிகளிலும் மோடியின் வேட்புமனுத் தாக்கல் காட்சிகள் டிவியில் ஒளிபரப்பானது. எனவே, இது தேர்தல் நடத்தை விதி மீறல் என அவர் குற்றம் சாட்டினார்.
எனவே, மோடி மற்றும் இதில் தொடர்புடைய பா.ஜனதா தலைவர்கள் அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு அவர் கோரிக்கை விடுத்தார். நன்கு திட்டமிட்டு, ஓட்டுப்பதிவு நாளில் மனுதாக்கலுக்கு பா.ஜனதா ஏற்பாடு செய்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications