டெல்லியில் திருப்பம்- ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க காங். ஆதரவு- ஆளுநருக்கு கடிதம்!!

டெல்லி சட்டசபை தேர்தலில எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 70 சட்டசபை தொகுதிகளில் பாரதிய ஜனதா கூட்டணி 32 தொகுதிகளிலும், அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 28 தொகுதிகளிலும், காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
தனிப்பெரும் கட்சியாக வந்துள்ள பாரதிய ஜனதாவுடன் கவர்னர் நஜீவ் ஜங் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், போதிய பெரும்பான்மை பலம் இல்லாததால், ஆட்சி அமைக்க விருப்பம் இல்லை என்று பாரதிய ஜனதா மறுத்துவிட்டது.
இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் சட்டசபை கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று கெஜ்ரிவால் இன்று ஆளுநரை சந்தித்து பேசுகிறார்.
இதனிடையே வெற்றி பெற்ற 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தனர். அப்போது, ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்குமாறு யோசனை தெரிவித்தனர். இந்த யோசனை பரிசீலனையில் இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
இந்நிலையில், திடீர் திருப்பமாக, ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் நஜீப் ஜங்குக்கு மாநில காங்கிரஸ் தலைவர் ஜே.பி.அகர்வால் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
டெல்லியில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 36 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. ஆம் ஆத்மியின் 28 எம்.எல்.ஏ.க்களையும், காங்கிரஸ் கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்தால், 36 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைத்து விடுகிறது. எனவே, காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி அரசு அமைய வாய்ப்பு உருவாகியுள்ளது.
அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை ஆம் ஆத்மி ஏற்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications