மோடியை விமர்சித்ததால் நீக்கப்பட்ட மணிசங்கர் ஐயர்.. காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேர்ப்பு
பிரதமர் மோடியை விமர்சித்ததால் நீக்கப்பட்ட மணிசங்கர் ஐயர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
டெல்லி: பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்ததால் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, மணிசங்கர் அய்யர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். மணிசங்கர் ஐயர் குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலின்போது, காங்கிரஸுக்கு ஆதரவாக குஜராத்தில் தீவிர பிரச்சாரம் செய்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, மணிசங்கர் ஐயர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். அவரது பேச்சு, இன ரீதியான பிரச்சனையை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பிரதமர் மோடியை மணிசங்கர் ஐயர் இவ்வாறு விமர்சித்தது காங்கிரஸ் பாரம்பரியத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, மணிசங்கர் ஐயரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலயில், காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் அசோக் ஜெலாட் நேற்று முன்தினம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மணிசங்கர் ஐயரை மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பதற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பரிந்துரைத்துள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன் மூலம் மணிசங்கர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சி வட்டாரம் கூறுகையில், மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர், சிறந்த பேச்சாளர். எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை திறமையாக கையாளக் கூடிய, அனுபவமும், திறமையும் உடையவர். பத்திரிகைகளில் சிறப்பாக கட்டுரைகள் எழுதுபவரும்கூட. விரைவில் லோக்சபா தேர்தல் வர உள்ளதால், காங்கிரஸுக்கு கட்சிக்கு பலம் சேர்க்கும் வகையில், மணிசங்கர் ஐயர், மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார். என்று தெரிவித்தனர்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications