For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யாரை முதல்வராக போடலாம்.. ஆளை காட்டுங்க, இல்லை பேரைச் சொல்லுங்க!

Google Oneindia Tamil News

Recommended Video

    சட்டிஸ்கர் மாநில தேர்தல் முடிவுகள் என்ன ஆகும்?.. காங்கிரஸ் இடத்தை பிடிக்குமா?- வீடியோ

    ராய்ப்பூர்: சட்டிஸ்கர் மாநில தேர்தல் முடிவுகள் வெளியாக சரியாக ஒரு வாரம் இருக்கும் நிலையில் முதல்வரை தேர்வு செய்ய காங்கிரஸ் தயாராகி வருகிறது.

    15 ஆண்டுகளாக ஆட்சியை இழந்து தவித்து வரும் காங்கிரஸ் இம்முறை அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் மும்முரமாக இறங்கி உள்ளது.

    இந்த முறை நிச்சயம் நமது ஆட்சி தான் என்று மாநில தலைவர்கள் அளித்த வாக்குறுதியை கெட்டியாக பிடித்துக் கொண்டு இருக்கும் காங்கிரஸ், யார் முதலமைச்சர் என்று சொல்லுமாறு கருத்து கேட்டுள்ளது.

    ஆலோசனைக் குழு

    ஆலோசனைக் குழு

    அதற்காக குழு ஒன்றையும் அக்கட்சி அமைத்துள்ளது. அறிவார்ந்த நபர்கள், மாநிலத்தின் முக்கிய புள்ளிகள் ஆகியோரை டெல்லிக்கு வந்து ரகசியமாக யோசனை தெரிவிக்குமாறும் அந்த குழு கூறியுள்ளது.

     3, 4 பெயர்கள் அடங்கிய பட்டியல்

    3, 4 பெயர்கள் அடங்கிய பட்டியல்

    அவர்களிடம் அதற்கான பட்டியலை தருமாறு கோரியுள்ள டெல்லி மேலிடம், பரிந்துரைக்கும் நபர்களையும் டெல்லி வருமாறு அழைத்துள்ளது. 3 முதல் 4 பெயர்கள் கொண்ட பட்டியலை தர வேண்டும் என்றும் பணித்துள்ளது. மொத்தமுள்ள 90ல் 50 தொகுதிகள் நமக்கு தான் என்று கட்சி நிர்வாகிகள் அளித்த தெம்பால் உற்சாகமாக காணப்படுகிறது காங்கிரஸ் .

    நம்பிக்கையில் பாஜக

    நம்பிக்கையில் பாஜக

    காங்கிரஸ் ஒரு பக்கம் யார் முதலமைச்சராக அமர வைக்கலாம் என்று கணக்கு போட்டு கொண்டு இருக்க... இந்த முறையும் நாம தான்.. 3வது முறையாக ரமன் சிங் தான் முதலமைச்சர் என்று எதை பற்றியும் கவலை இல்லாமல் வலம் வருகிறது பாஜக.

    ஒரு வாரம்

    ஒரு வாரம்

    தேர்தல் பிரச்சாரம்... ஆளும் அரசு என்று என்று அதீத நம்பிக்கையில் பாஜக குஷியாக இருக்க... யாருக்கு அரியாசனம்.. யாருக்கு வனவாசம் என்ற மக்களின் முடிவுக்கு சரியாக ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்.

    English summary
    Congress has sought suggestions on the name of Chhattisgarh chief minister secretly
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X