பாஜகவுக்கு ‛செக்’.. லோக்சபா தேர்தலில் காங்கிரஸின் கூட்டணி இதுதான்.. வாய்விட்ட மல்லிகார்ஜூன கார்கே!
சத்தீஸ்காரில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தின் 3 நாள் மாநாடு நடந்து வருகிறது.
ராய்ப்பூர்: 2024 நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியின் கூட்டணி எப்படி அமையும் என்பது பற்றிய முக்கிய விஷயத்தை அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். இந்த முக்கிய தகவலை சத்தீஸ்கார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தின் 3 நாள் மாநாடு தொடங்கிய நிலையில் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
2014 மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தல்களில் பாஜகவிடம், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் வெற்றி பெற்று செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. இதற்கான பணிகளை காங்கிரஸ் கட்சி துவக்கிவிட்டது.

2024 லோக்சபா தேர்தல் முக்கியம்
இந்தியாவில் மாநிலங்கள் வாரியாக பாஜகவின் எழுச்சி மற்றும் மாநில கட்சிகளின் ஆதிக்கம் ஆகியவற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் காங்கிரஸ் கட்சி திணறி வருகிறது. ஒரு காலத்தில் முழு இந்தியாவையும் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் தற்போது விரல்விட்டு எண்ணும் வகையில் சில மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. சில மாநிலங்களில் ஆளும் கட்சியுடன் கூட்டணி என்ற பெயரில் தொற்றி கொண்டுள்ளது. இதனால் 2024 நாடாளுமன்ற தேர்தல் என்பது காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய பாயிண்டாக உள்ளது.

காங்கிரஸ் மாநாடு
இந்நிலையில் தான் மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தோடு சிறப்பு மாநாடு சத்தீஸ்காரில் துவங்கியது. 3 நாட்கள் நடக்கும் இந்த மாநாடு சத்தீஸ்கார் மாநிலம் ராய்பூரில் நடந்து வருகிறது. இது காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85வது மாநாடாகும்.

கடும் நெருக்கடி
இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ‛‛2024ம் ஆண்டில் சத்தீஸ்காருக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் இங்கு காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85வது மாநாடு இங்கு நடக்கிறது. பெரிய சவால் நிறைந்த அதேநேரத்தில் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ள இந்த நேரத்தில் நாம் அனைவரும் இங்கு கூடியிருக்கிறோம். நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அரசிலமைப்பின்படி செயல்பட வேண்டிய அமைப்புகள் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன. சீனா உடனான எல்லை பாதுகாப்பில் பிரச்சனை உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. மேலும் வேலைவாய்ப்பின்மையும் உச்சம் தொட்டி உள்ளது.

கூட்டணியில் யார் யார்?
இந்த இக்கட்டான சூழலில் நாட்டை மீட்டெடுக்கும் வகையில் திறமையான மற்றும் அர்ப்பணிப்பு கொண்ட தலைமையை காங்கிரஸால் மட்டுமே வழங்க முடியும். கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மக்களுக்காக செயல்பட்டு வந்தது. அதேபோன்ற கூட்டணியை மீண்டும் மத்தியில் அமைக்க நாம் முயற்சிக்க வேண்டும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்களுக்கு எதிரான பாஜக அரசை வீழ்த்த வேண்டும். இதற்காக நம்மை போன்று ஒத்த சித்தாந்தம், கொள்கை கொண்டு பாஜகவை எதிர்ப்போருடன் கூட்டணி அமைக்க வேண்டும்.

தியாகங்கள் செய்ய..
2024ம் ஆண்டுக்கான சத்தீஸ்கார் சட்டசபை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் நலன் கருதி எத்தகைய தியாகங்களை செய்யவும் நாம் தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால் தற்போதைய பாஜக தலைமையிலான மத்திய அரசு டெல்லியில் இருந்து கொண்டு ஜனநாயகம், ,அரசியலமைப்பை உடைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. மேலும் மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கைளை முடக்குகிறது. பிரதமர் மோடி தனது நண்பர்களின் நலனுக்காக பணியாற்றி வருகிறார். இதனை கட்டுப்படுத்த நாம் தீவிரமாக செயல்பட வேண்டும்'' என்றார்.

சுதந்திரமாக செயல்பட...
இதனால் கட்சியின் உறுப்பினர்கள் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க வேண்டும். அதோடு கட்சியின் செயற்குழுவில் முக்கியமான முடிவை எடுக்க வேண்டும். காங்கிரஸ் தலைவராக நான் உங்களை சுதந்திரமாக செயல்படவும் கூட்டாக முடிவெடுக்கவும் வலியுறுத்துகிறேன். எந்த முடிவை எடுத்தாலும் அது அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவாக இருக்க வேண்டும்.
-
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு












Click it and Unblock the Notifications