சத்தீஸ்கர் மாநிலத்தில் எகிறி அடிக்கும் காங்கிரஸ்.. பாஜக நிலை ரொம்ப பாவம்.. வெளியான புது சர்வே
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அங்க எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்த புது சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.
சத்தீஸ்கரில் வரும் நவம்பர் 7 மற்றும் 17 என்று இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து வரும் டிச. 3ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தைப் பொறுத்தவரை இப்போது அங்கே பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. அங்கே ஆட்சியைப் பிடிப்பதில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி: இதற்கிடையே சத்தீஸ்கர் சட்டசபைத் தேர்தல் தொடர்பாக மனோரமா நியூஸ்- விஎம்ஆர் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் ஆளும் காங்கிரஸ் கட்சி சத்தீஸ்கர் மாநிலத்தைத் தக்க வைக்க வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் தனது வாக்கு வங்கியைச் சற்று இழந்தாலும் ஆட்சியைத் தக்க வைக்க போதுமான இடங்களைக் காங்கிரஸ் வெல்லும் என்று இந்த சர்வே கூறியிருக்கிறது.
சத்தீஸ்கர் தேர்தலில் காங்கிரஸ் வாக்கு வங்கி என்பது 1.94% குறையும். அதாவது கடந்த தேர்தலில் 43.04% வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் இந்த முறை 41.1 சதவீத வாக்குகளை மட்டுமே பெரும் என்று இந்த சர்வே கூறியுள்ளது. இதனால் கடந்த தேர்தலில் 68 தொகுதிகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சியால் இந்த முறை 53-58 இடங்களில் மட்டுமே வெல்ல முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் காங்கிரஸ் பெறும் இடங்கள் குறைந்தாலும் கூட அது தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 46 இடங்களைக் காட்டிலும் குறையவில்லை. இதனால் வரும் தேர்தலில் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்கும் என்றே இந்த சர்வே கூறியுள்ளது.
பாஜக கஷ்டம்: அங்கு இப்போது எதிர்க்கட்சியாக உள்ள பாஜக கடந்த 2018 தேர்தலில் 32.97% வாக்குகளைப் பெற்ற நிலையில், இந்த முறை அது 4% அதிகரித்து 36.8 சதவீதமாக உயரும் என்று இந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பாஜக 28-34 இடங்களை சத்தீஸ்கரில் கைப்பற்றும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் பாஜக சத்தீஸ்கரில் 15 இடங்களில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.
ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் மற்றும் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட இதர கட்சிகள் கடந்த 2018இல் ஏழு இடங்களில் வென்ற நிலையில், இந்த முறை அவர்கள் வெல்லும் இடங்கள் 4ஆக குறையும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல்கள்: சத்தீஸ்கர் மாநிலத்தைப் பொறுத்தவரை அது பாஜகவின் கோட்டையாகவே பல ஆண்டுகள் இருந்தது. கடந்த 2018இல் அங்கே காங்கிரஸ் வெல்வதற்கு முன்பு தொடர்ந்து மூன்று முறை பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. கடந்த 2003, 2008 மற்றும் 2013 என மூன்று தேர்தல்களில் பாஜக தொடர்ச்சியாக வென்றது. அதில் பாஜக முறையே 50, 50 மற்றும் 49 இடங்களைப் பெற்றது. மறுபுறம் இதே ஆண்டுகளில் காங்கிரஸ் 37, 38 மற்றும் 39 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications