For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏற்கனவே காற்று மாசால் திணறும் டெல்லி.. சரமாரியாக வெடிகளை கொளுத்திபோட்ட காங்கிரஸ் தொண்டர்கள்!

ஏற்கனவே காற்று மாசால் சிக்கி திணறும் தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் சரமாரியாக வெடிகளை கொளுத்தி போட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    காற்று மாசுபாட்டால் அல்லல்படும் டெல்லியில் பட்டாசுகளை வெடித்து கொண்டாடிய காங்கிரஸ் தொண்டர்கள்

    டெல்லி: ஏற்கனவே காற்று மாசால் சிக்கி திணறும் தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் சரமாரியாக வெடிகளை கொளுத்தி போட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் 87வது தலைவராக ராகுல்காந்தி இன்று பொறுப்பேற்றார். ராகுல் காந்தியின் பதவியேற்பு நிகழ்ச்சி டெல்லி அக்பர் சாலையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    விழாவில் ராகுல் காந்தி, 19 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    சான்றிதழை பெற்ற ராகுல்

    சான்றிதழை பெற்ற ராகுல்

    ராகுல் காந்தியிடம் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டதன் சான்றிதழ் வழங்கப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 87-வது தலைவராகவும் நேரு குடும்பத்தில் இருந்து 6-வது காங்கிரஸ் தலைவராகவும் ராகுல் காந்தி தேர்வாகியுள்ளார்.

    விண்ணை பிளந்த வெடி சத்தம்

    விண்ணை பிளந்த வெடி சத்தம்

    ராகுல்காந்தி பொறுப்பேற்றுக்கொண்டதும், அங்கு திரண்டிருந்த காங்கிரஸ் கட்சியர் சரமாரியாக வெடிகளை கொளுத்தினர். பெரிய பெரிய பெட்டிகளில் வரிசையாக கொளுத்தப்பட்ட வெடியால் சத்தம் விண்ணை பிளந்தது.

    சத்தத்தால் தவித்த சோனியா

    சத்தத்தால் தவித்த சோனியா

    வெடிகள் வெடிக்கப்பட்டதால் பெரும் புகை மூட்டம் ஏற்பட்டது. காதை கிழித்த வெடிச்சத்ததால் பேச முடியால் தவித்தார் சோனியா காந்தி.

    பொறுமையிழந்த சோனியா

    பொறுமையிழந்த சோனியா

    ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த அவர், வெடி சத்தத்தால் தன்னால் உரக்க பேசமுடியவில்லை என்றார். சற்றுநேரம் பேச்சை நிறுத்திய அவர், வெடி வெடிப்பதை நிறுத்தும்படி கூறினார்.

    ஏற்கனவே காற்று மாசு

    ஏற்கனவே காற்று மாசு

    இதையடுத்து வெடி சத்தம் நின்றப்பிறகு மீண்டும் பேச்சை தொடர்ந்தார் சோனியா காந்தி. ஏற்கனவே காற்று மாசால் திணறுகிறது தலைநகர் டெல்லி.

    தீபாவளிக்குக்குகூட தடை

    தீபாவளிக்குக்குகூட தடை

    காற்று மாசு ஆபத்து கட்டத்தை தாண்டியதால் வாகனங்கள் இயக்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிகப்பட்டன. தீபாவளி பண்டிகைக்கு கூட வெடிகளை வெடிக்க கூடாது என தடைவிதித்தது உச்சநீதிமன்றம்.

    பட்டாசுகளால் பெரும் சர்ச்சை

    பட்டாசுகளால் பெரும் சர்ச்சை

    இந்நிலையில் ஒட்டு மொத்த வெடியையும் இன்று ஒரே நாளில் வெடித்து தீர்த்துவிட்டனர் காங்கிரஸ் தொண்டர்கள். ஏற்கனவே காற்றுமாசால் மக்கள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட சுவாச பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் காற்றுமாசால் திணறும் டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் தன்பாட்டுக்கு வெடிகளை கொளுத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Rahul gandhi takes oath as national congress leader. Congress party workers celebrates this as festival. Congress workers burned lots of crackers to celebrat rahul as congress leader in Air polluted Delhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X